ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
5 பேருக்கு ஆயுள் தண்டனை!

காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள உதவிய இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் என்பவரது மகன் சுந்தரபாண்டி (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி-அன்பரசி ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்ய உதவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அன்பரசியின் தந்தை அன்பழகன் மற்றும் சகோதரர்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி, அழகுநிதி ஆகிய 5 பேரும் கடந்த 11.01.2017 அன்று இரவு 9 மணியளவில் சுந்தரபாண்டியின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இத் தாக்குதலில் படுகாயமடைந்த சுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சுந்தரபாண்டியின் தந்தை பவுன்ராஜ் (65), தம்பி மருதுபாண்டி (30) ஆகியோர் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பவுன்ராஜ் அளித்த புகாரின்பேரில், நாச்சியார்கோவில் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அன்பழகன் மற்றும் அவரது நான்கு மகன்களை கைது செய்தனர்.

இவ் வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ் வழக்கில் இன்று (திங்கள்கிழமை)  தீர்ப்பளித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராதிகா, குற்றஞ்சாட்டப்பட்ட அன்பழகன் மற்றும் அவரது நான்கு மகன்கள் என 5 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.