தமிழிலும் இந்தியிலும் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ் ‘ – டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் தயாரிப்பு!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தமிழிலும் இந்தியிலும் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ் ‘ – டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் தயாரிப்பு!

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Matchbox pictures மெரி கிறிஸ்துமஸை தயாரித்து வழங்க, ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் படங்களை இயக்கிய இயக்குனர் ஶ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இது இவருடைய முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது, அதே போல கத்ரினா கைஃப் முதல் முறை தமிழில் அறிமுகமாகுகிறார். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் இருந்து இந்த படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மெரி கிறிஸ்துமஸ் இரண்டு மொழிகளில் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர், அதே நேரத்தில் அதே வேடங்களில் இந்தி பதிப்பில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

3

இது நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை சேர்க்கும். இப்படத்தில் பரி என்ற குழந்தை நடிகரும் அறிமுகமாகிறார். அஸ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்டே ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ரமேஷ் தோராணி & ஜயா தோராணி மற்றும் சஞ்சய் ரவ்த்ரே & கேவல் கர்க் ஆகியோர் டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மெரி கிறிஸ்துமஸ் படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மெரி கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் 15, டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது.

-மதுரை மாறன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.