பேராசிரியர் செயலாபதிக்கு பாவேந்தரின் ஞான நிழல் விருது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காவிரிக் கவித்தமிழ் முற்றம் சார்பாக கவிக்கோ ஞானத்தால் நிறைந்த வானம் என்கிற தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் இருபதாவது நிகழ்வு நேற்று திருச்சி புரதானப் பூங்காவில் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள், இளையோர் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர்  பங்கேற்ற இந்நிகழ்விற்கு செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஆரோக்கிய தனராஜ் தலைமையேற்றார். சமூக நீதிக் கலைஞர் ஆசிரியர் து.காந்தி வாழ்த்துரையாற்றினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரிப் பணி நிறைவு பேராசிரியர் முனைவர் சு.செயலாபதி கவிக்கோவின் விரல்கள் சுட்டியவை என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

முற்றத்தின் செயலர் முனைவர் ஜா.சலேத்  கவிக்கோ மாநாடு குறித்த அறிவிப்புகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் ஜனவரி மாதம் நடைபெறும் தமிழர் திருநாள் விழாவில் காவிரிக் கவித்தமிழ் முற்றம் சார்பாக பேராசிரியர் சு.செயலாபதி அவர்களுக்கு பாவேந்தரின் ஞான நிழல் எனும் விருது வழங்கப்பட இருக்கிறது என்கிற செய்தியை அறிவித்தார். முன்னதாக மாணவர் கதிர் வரவேற்புரையாற்றினார். நிறைவில் மாணவர் பிரான்சிஸ் ஆன்டனி நன்றியுரை ஆற்றினார. நிகழ்ச்சிகளை மாணவி ஜோ.காயத்ரி நெறியாள்கை செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை காவிரிக் கவித்தமிழ் முற்றம் செயல் இயக்குனர் மெர்சி டயானா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.