அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஹேப்பி ராஜ் ‘

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: பியான்ட் பிக்சர்ஸ் ஜெயவர்த்தன், இணைத் தயாரிப்பு: ஜெய்காந்த் சுரேஷ். டைரக்டர்: மரிய ராஜா இளஞ்செழியன். ஆர்டிஸ்ட்: ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகெளரி பிரியா, பிராத்தனா நாதன், ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், அப்பாஸ், மதுரை முத்து, அதிர்ச்சி அருண், ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், இசை: ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங்: ஆர்கே செல்வா, பிஆர்ஓ: ரேகா

படத்துல நம்ம ஹீரோ ஜி.வி.பிரகாஷின் கேரக்டர் பேரே ஹேப்பி (எ) ஆனந்தராஜ் தான். அதைத் தான் சுருக்கி ஹேப்பி ராஜ் என டைட்டில் வைத்துள்ளார்கள். இவரோட அப்பா ஜார்ஜ் மரியன் ஸ்கூல் வாத்தியார். அவரை எல்லோரும் குதிரை முட்டைன்னு தான் கூப்பிடுவார்கள். ஹேப்பி ராஜை சின்ன குதிரை முட்டைன்னு கூப்பிடுவதால கடுப்பாகுறாரு. இதனால ஒரு லவ்வே பிரேக் அப் ஆகுது. எல்லாமே தனது அப்பாவால தான்னு டென்ஷனாகி பெங்களூருக்கு வேலைக்கு போறாரு ஹேப்பி. அங்கே மாளவிகா நாயர் மீது லவ்வாகிறார். ஆனால் தனது அம்மா-அப்பாவைப் பத்தி மாளவிகா கிட்ட சொல்ல மாட்டேங்குறாரு ஹேப்பி.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஹேப்பி ராஜ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குழப்பங்களுக்கு மத்தியில் ஜி.வி.பிரகாஷ்  சிரிக்கிறார்இந்த மாளவிகாவோட அப்பா அப்பாஸ் பெரிய பணக்காரர். மகளின் லவ்வுக்கு க்ரீன் சிக்னல் போட்டதால  நிச்சயதார்த்துக்கு ஹேப்பி ராஜின் அப்பா ஜார்ஜ் மரியன் தன்னோட கிராமத்து சொந்தங்கள் சகிதமா வர்றாரு. இந்த கும்பலைப் பார்த்து கடுப்பாகிறார் அப்பாஸ். அதுக்கு அப்புறம்…..அட போங்கப்பா நீங்களும் உங்க ஹேப்பி ராஜும் ….‌அப்படிங்கிற நினைப்பு படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷத்துலேயே வந்துருச்சு. ஏன்னா படத்தின் ஓப்பனிங் சீன்லயே கிராமத்துல ஒரு பாலத்துல கோட் சூட் போட்டு வந்து நிக்குறாரு ஜிவி பிரகாஷ். எதிர்ல நிக்குற பிராத்தனா நாதன் “உங்க அப்பா குதிரை முட்டை. நீ சின்ன குதிரை முட்டை. அதனால நம்ம லவ் பிரேக் அப்னு சொல்லிட்டு போயிடுறாரு. அட ஐயா டைரக்டரே இப்படியெல்லாம் எப்படிப்பா உங்களால யோசிக்க முடியுது? அப்ப ஆரம்பிக்கும் ஃப்ளாஷ் பேக் தான்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃப்ளாஷ் பேக்கா போட்டு இம்சை பண்ணிட்டீகளப்பு. அதிலும் க்ளைமாக்ஸ்ல பழைய ரயில் டிக்கெட்டை வச்சு ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டீக பாருங்க….. இந்திய சினிமாவுல எந்த டைரக்டரும் இப்படி யோசிச்சிருக்கமாட்டான். ஜிவி பிரகாஷின் அம்மா கீதா கைலாசம் பெங்களூரு வந்து சரக்கு போட்டு சலம்பல் பண்றதெல்லாம் சகிக்க முடியலடா சாமீ….. மதுரை முத்து டோட்டல் வேஸ்ட். பல படங்களில் கொஞ்சம் நல்லாவே பண்ணிக்கிட்டு நல்லாத்தான் வந்துக்கிட்டிருந்தாரு ஜிவி பிரகாஷ்.

Trich Job

இந்த ஹேப்பி ராஜ்ல புதுசா ட்ரை பண்ணுவோம்னு நினைச்சு படு சுமாரா பெர்ஃபாம் பண்ணி ரசிகர்களை கடுப்பேத்திட்டாரு மை லார்ட். அதனால் மியூசிக்ல கான்சென்ட்ரேட் பண்ணுங்க ப்ரோ…. இன்னும் இன்னும் உச்சத்திற்கு போவீர்கள்… இந்த ஹேப்பி ராஜின் மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு என்னாச்சுன்னு தெரியல.  பேக் ரவுண்ட் ஸ்கோரில் காட்டிரைச்சல், காட்டுக்கத்தல்னு நம்ம காதுல ரத்தம் வழிஞ்சு ரணகளமாகிப் போச்சு… மொத்தத்துல டைட்டிலில் மட்டும் தான் ஹேப்பி இருக்கு.

அங்குசம் பார்வையில் ‘ஹேப்பி ராஜ் ‘ 34/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.