அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குழந்தை முதல் கிழவி வரை குரலால் அசத்திய எஸ்.ஜானகி! பின்னணி பாடல்களின் கதாநாயகி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஒரு பாட்டுக்காகவே அந்த தமிழ்ப் படத்தின் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்து, தங்க இசைத்தட்டு விருது பெற்ற பிறகும், அந்தப் பாடலை பாடியவருக்கு தமிழ் திரை உலகில் நிலையான இடம் கிடைப்பதற்கு 18 ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டி இருந்தது. அவர்தான் மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு மொழியில் பாடத் தொடங்கி தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் இந்தி,  மராத்தி மொழிகளிலும் பாடியவர். 1957 ஆம் ஆண்டு வெளியான கொஞ்சும் சலங்கை என்ற தமிழ்ப் படத்தில், “ஏன் சாந்தா பாட்டை நிறுத்தி விட்டாய்? உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே! பாடு சாந்தா” என்ற ஆணின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கும் ‘சிங்காரவேலனே தேவா’ எனும் அந்த தேனினும் இனிய குரல். அது, எஸ் ஜானகியின் குரல். அந்தப் பாடலில் ஒலிக்கும் நாதஸ்வர இசை, காருக்குறிச்சி அருணாசலம் எனும் மாபெரும் நாதஸ்வர கலைஞனின் வாசிப்பு. இருவரும் போட்டி போட்டு ஒருவருக்கொருவர் சமமாக சாதித்து இருப்பார்கள். அதனால்தான் அந்த பாட்டு அடங்கிய இசைத் தட்டு விற்பனையில் சக்கை போடு போட்டது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

தங்கை இசைத் தட்டு விருது பெற்ற போதும் எஸ் ஜானகி அதன் பிறகு தமிழில் அளவாகவே பாடி வந்தார். ஏ எம் ராஜா, எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் போன்ற திரை இசை வல்லுனர்களின் இசையில் ஒரு சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 1975ல் இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் ஜானகிக்கு முக்கியத்துவம் கிடைத்தது.

அன்னக்கிளி உன்னைத் தேடுது..  மச்சான பாத்தீங்களா பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவி படத்தையும் ஓட வைத்தது.

யாவரும் கேளீர்

ராஜாவின் இசை ராஜாங்கம் தமிழ் திரையில் கொடி கட்டிப் பறந்தது. அதன் பிறகு எஸ். ஜானகிக்கு தமிழில் தொடர்ச்சியான பாடல்கள் கிடைத்தன. பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில், இளையராஜா இசையில் அமைந்த படத்தின் முதல் பாடலான செந்தூரப்பூவே பாடலை பாடி தேசிய விருது பெற்றார் ஜானகி.

எஸ்பிபி, ஏசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற பிரபல பாடகர்களுடன் ஜோடி சேர்ந்து ஜானகி பாடிய பாடல்கள் ஹிட் அடித்தன. ஏ ஆர் ரகுமான் இசையில் மார்கழி திங்கள் அல்லவா.. அனிருத் இசையில் அம்மா.. அம்மா.. என தமிழில் இசைக்கொடி நாட்டினார் ஜானகி.

மாதாவின் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் என்று பக்தி ததும்பவம் அவரால் பாட முடியும், நேத்து ராத்திரி யம்மா என்று உணர்ச்சி மேலிடவும் அவரால் பாட முடியும். கதாபாத்திரத்திற்கு ஏற்ற குரலும் தொனியும் ஜானகிக்கு உரிய சிறப்பம்சம்.

குழந்தை முதல் கிழவி வரையிலான ஒரு பெண்ணின் பல பருவங்களையும் வெளிப்படுத்தக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறார் ஜானகி. ருசி கண்ட பூனை என்ற படத்தில் ‘கண்ணா நீ எங்கே?’ என்ற பாடலை அச்சு அசலான மழலையின் குரலில் அவர் பாடி அசத்தியிருப்பார். பேபி ஷாலினி நடித்த பிள்ளை நிலா படத்தில் ராஜா மகள் ரோஜா மகள் பாடல் உட்பட குழந்தையின் குரலில் ஜானகி பாடிய பாடல்கள் ஏராளம்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

எஸ். ஜானகி காலமானார் | திரையுலகினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்குழந்தை வளர்ந்து பருவம் அடைவது இயற்கை எனது பருவம் வந்த பெண் காதல் உணர்வுகளை தனக்குத்தானே வெளிப்படுத்தி மகிழும் குரலில் ஏராளமான பாடல்களை ஜானகி பாடி இருக்கிறார். உதாரணத்திற்கு, சந்திரபோஸ் இசையில் பொண்ணு புடிச்சிருக்கு படத்தில் ஜானகி பாடிய, ‘அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே’ என்ற பாடல் இளம் பெண்ணின் உள்ளுணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கும். இதுபோல நூற்றுக்கணக்கான பாடல்கள் அவர் குரலில் ஒலித்தது உண்டு.

உல்லாச பறவைகள் படத்தில் ‘அழகு ஆயிரம் உலகம் முழுவதும்’ இந்தப் பாடலை அவரது குரலில் கேட்கும் போது மனது சிறகு கட்டி பறக்கும்.

இளம் பெண்ணுக்கு திருமணமானதும் கணவனிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாகும். ஆசையும் பயமும் கலந்த உணர்வுகளை தொகுத்து, ‘புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்..’ இன்று பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் தான் எஸ். ஜானகி.

திருமண வாழ்க்கையில் தாய் என்ற பொறுப்பை சுமந்து குழந்தைகளை வளர்க்கும் பெண்ணின் சுமையை,  அழகிய கண்ணே உறவுகள் நீயே என்று பாடியவரும் அவர்தான்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

கணவனிடம் தன் இச்சைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் மனைவியின் குரலாக ,’நான் ஆளான தாமரை.. ரொம்ப நாளாக தூங்கலை’ என்று விரகதாபத்தை வெளிப்படுத்தி இருப்பார். கணவனை இழந்த இளம் கைம்பெண் தனிமைத் துயரில் படுகின்ற  வேதனையை ‘அழகு மலராட அபிநயங்கள் கூட’ பாடலில் அவர் குரல் வெளிப்படுத்தும். ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ பாடலும் இதே ரகம் தான்.

குழந்தையாக, பருவப் பெண்ணாக, காதலியாக, மனைவியாக, தாயாக, கைம்பெண்ணாக ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய எஸ் ஜானகி, போடா போடா பொக்க என்ற பாடலை கிழவியின் குரலில் பாடி, வாழ்வின் நிறைவிலும் மகிழ்ச்சி நிறைந்து இருப்பதை வெளிப்படுத்தி இருப்பார். வாழ்வு முடிந்த பிறகும் நினைவாக தொடரும் வாழ்க்கையின் குரலாக, வேலையில்லா பட்டதாரி படத்தில், அம்மா.. அம்மா.. பாடலின் நடுவே ஒலிக்கும், “நான் போன பின்பும்.. நீ வாழ வேண்டும்.. எந்தன் மூச்சும் உனக்குள்ளே உண்டு” என்ற எஸ்.ஜானகியின் தாய்மைக் குரல், அவர் மறைந்த இந்த நேரத்தில் நினைவெங்கும் ஒலிக்கிறது.

காற்றில் எந்தன் கீதம் எனப் பாடியவர் காற்றுள்ள வரை நம் மனங்களில் பாடிக் கொண்டே இருப்பார்.

—  கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.