“தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்தோம்”–‘மர் மர்’ தயாரிப்பாளர் பெருமிதம்!
தமிழ் சினிமாவில் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் படமான ‘மர்மர்’ கடந்த 07-ஆம் தேதி ரிலீஸானது. முதலில் 100 தியேட்டர்களில் மட்டும் வெளியாகி, ரசிகர்களின் பெரும் ஆதரவோடு இப்போது 400 தியேட்டரில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
தொடர்ந்து இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘மர்மர்’ படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் மார்ச் 12- ஆம் தேதி காலை நடந்தது. இந்த விழாவில், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசியவர்கள் ….
புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி
“எங்கள் படத்தை பார்த்து, ரசித்து பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இல்லாமல் எங்களால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. இது மிகவும் பெருமையாக இருக்கிறது.இந்தப் படத்திற்காக தங்கள் முழு முயற்சியை கொடுத்த அனைவருக்கும் நன்றி” .
படத்தின் தயாரிப்பாளர் ‘எஸ்.பி.கே. பிக்சர்ஸ்’ பிரபாகரன்
” மர்மர் படத்தை கடைகோடியெங்கும் கொண்டு சேர்த்த பத்திரிகை யாளர்களுக்கும் வெற்றி பெற வைத்த தமிழ் ரசிகர்களுக்கும் நன்றியும் மக்களுக்கு வணக்கமும் . தமிழ் ரசிகர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்தோம். இப்படத்தை வெற்றி பெற வைத்தனர். அதற்காக மீண்டும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.இந்தப் படத்தின் இயக்குநர் ஹேம் நாத் கடின உழைப்பின் மறு உருவம். எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவர். தயாரிப்பாளராக இந்தப் படத்தால் எனக்கு மகிழ்ச்சி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தப் படத்தை விநியோகம் செய்ய முன்வந்த குகன் சாருக்கு நன்றி. நான் அவரிடம் சகோதரராகவே பழகினேன். எல்லோரும் கடின உழைப்பை கொடுத்தார்கள். அனைவரின் பெயரை விட அவர்களது கதாபாத்திரத்தின் பெயர் தான் நினைவில் உள்ளது. அந்த அளவுக்கு உண்மைக்கு நிகராக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேசன் மிகவும் அருமையாக பணியாற்றி இருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர் கெவின் இந்தப் படத்தின் இயக்குநருடன் இரவு பகலாக உழைத்தார். படத்தொகுப்பாளர் ரோஹித் சிறப்பாக பணியாற்றினார். உங்கள் அனைவருக்கும் நன்றியை தவிர வேறு என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. இதைத் தாண்டி எனது எஸ்.பி.கே. குழுவினர் கடைசி நான்கு, ஐந்து நாட்கள் உறங்குவதற்கு மட்டுமே வீட்டிற்கு சென்றனர்.
மேலும், என் நிறுவனம் தொடங்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என் குழுவினர் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒருமுறை கூட பணியாற்றியதே இல்லை. ஆனால், இந்தப் படத்திற்காக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பணியாற்றினர். உலகெங்கிலும் பணியாற்றி வரும் எஸ்.பி.கே. குழுவினர் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அந்தளவுக்கு பணியாற்றி இருக்கிறீர்கள். எங்களுக்காக உண்மையாக முதன் முதலில் ட்வீட் செய்த எஸ்.ஆர்.பிரபு சாருக்கு நன்றி, “பாசிடிவ் திங்ஸ் ஆர் ஹேப்பினிங் ஃபிரம் தி மர்மர் மூவி,” என்று ட்வீட் செய்த ஆர்யா வுக்கு நன்றி. ஊடகத்துறையினருக்கு மீண்டும் நன்றி”..
விநியோகஸ்தர் குகன்
“நூறாண்டுகளை க் கடந்த சினிமா உலகில் மர்மர் குழு புதிதாக வந்த குழந்தை தான். இதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த உங்களின் மனமார்ந்த ஆதரவை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றீர்கள். இதற்கு உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. இந்தப் படத்தின் தோற்றம், கதைக் கரு என எல்லாமே புதிதாக இருந்தது. தமிழ் திரையுலகில் இது பெரிய வரவேற்பு. உங்களின் கைத்தட்டல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் குழுவினரின் பலம் தான் இந்தப் படத்தின் முழுமையான வெற்றியாக மாறியுள்ளது.உங்களுக்கு உதவ எங்களை போல் பல நல்ல விநியோகஸ்தர்கள் இருக்கிறோம். சரியான நேரத்தில் படத்தை கொண்டுசேர்க்க முடியும். அந்த நம்பிக்கையில் நீங்களும் பயணம் செய்யுங்கள், நாங்களும் பயணம் செய்கிறோம். தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்
“உங்களால் நாங்கள் தெம்புடன் இருக்கிறோம். முதலில் தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு என் மீதும், மற்றவர்கள் மீதும் அதிக நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையை நீங்களும் வைத்தீர்கள். இதனால் தான் இந்தப் படம் இப்படி வந்துள்ளது. என் மீதும், மற்ற அனைவரின் மீதும் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை தொடங்கி தற்போது இது வெற்றிப் படமாகவே மாறியிருக்கிறது.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என உங்கள் தரப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. இந்தப் படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக நீங்கள் தான் இருக்கின்றீர்கள். அதற்கு மிகப் பெரிய நன்றி. படத்தில் நடித்தவர்கள்,பணியாற்றிய டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி. குகன் சாருக்கு நன்றி. நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை, நீங்களும் எங்களை அப்படி பார்த்துக் கொண்டீர்கள். தனது சகோதரியின்திருமண வேலைகளுக்கிடையேயும்ஊடகத்தினரை ஒருங்கிணைத்த பிஆர்ஓ. ஸ்ரீவெங்கடேஸுக்கு மிகப்பெரிய நன்றி”.
படக்குழுவினருக்கும் பிஆர்ஓ.வெங்கடேஸுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார் தயாரிப்பாளர்.
— மதுரை மாறன்.