அங்குசம் பார்வையில் ‘வருணன்’
தயாரிப்பு : ‘யாக்கை பிலிம்ஸ்’ கார்த்திக் ஸ்ரீதரன். இணைத் தயாரிப்பு : வான் புரொடக்ஷன்ஸ்’ ஜெயவேல்முருகன். டைரக்ஷன் ; ஜெயவேல்முருகன். நடிகர்-நடிகைகள் : ‘டத்தோ’ ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஹரிப்ரியா, கேப்ரில்லா, சங்கர்நாக் விஜயன், ஜீவாரவி, பிரியதர்ஷன், மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைடு’ கார்த்தி. ஒளிப்பதிவு : எஸ்.ஸ்ரீராம சந்தோஷ், இசை : போபோ சசி, எடிட்டிங் : முத்தையன், ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன். பி.ஆர்.ஓ. : நிகில்முருகன்.
வடசென்னையின் திருவொற்றியூர் ஏரியாவில் அய்யாவு [ ராதாரவி ]வின் ஆண்டவர் வாட்டர் , ஜானின் [ சரண்ராஜின் ] ஜான் வாட்டர் கேன்கள் தான் தண்ணீர் கேன் சப்ளையில் கொடிகட்டிப் பறக்கின்றன. ஏரியா பிரித்துக் கொண்டு ஜெண்டில்மேல் அக்ரிமெண்ட்டில் வாட்டர் கேன் பிஸ்னஸ் பண்ணுகிறது இரண்டு டீமும். ராதாரவி டீமில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷும் சங்கர்நாக் விஜயனும் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறார்கள். மதுரைக்காரரான துஷ்யந்துக்கும் நெல்லையைச் சேர்ந்த சங்கர்நாக்கிற்குமிடையே அடிக்கடி சின்னச் சின்ன மோதல்கள் நடந்தாலும் பஞ்சாயத்து பண்ணி தீர்த்து வைக்கிறார் ராதாரவி.
சரண்ராஜோ, தனது மனைவி மகேஸ்வரி, மச்சான் ஹைடு சப்போர்ட்டுடன் வாட்டர் கேன் பிஸ்னஸுடன் ‘சுண்டக் கஞ்சி வியாபாரத்தையும் கள்ளத்தனமாக செய்கிறார். ஏ.சி.ஜீவா ரவி இதற்கு சப்போர்ட்டாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அய்யாவு ஆட்களும் ஜான் ஆட்களும் அடிக்கடி மோத ஆரம்பிக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் சம்பவங்கள் நடக்கின்றன. க்ளைமாக்ஸில் யார் சாகிறார்கள்? யார் பிழைக்கிறார்கள்? இதான் இந்த ‘வருணன்’.
”மனித இனம் தோன்றிய போது” என வாய்ஸ் ஓவரில், பேக்ட்ராப்பில் டிராயிங்குடன் படத்தை ஆரம்பிக்கிறார் டைரக்டர். ’மனித நாகரீகம் வளர்ந்து பஞ்சபூதங்களில் நீரையும் நிலத்தையும் மனிதன் வியாபாரப் பொருளாக்கிய பிறகு, அவனிடையே போட்டியும் பொறாமையும் ஆரம்பித்தது. 1995-ல் சென்னையில் வாட்டர்கேன் விற்பனைக் கலாச்சாரம் ஆரம்பித்த பிறகு என்ன நடக்கிறது?” இதையெல்லாம் வாய்ஸ் ஓவரில் டைரக்டர் ஜெயவேல்முருகன் சொன்னதைத் கேட்டதும், கதை நல்லத்தானே இருக்கு,. அப்படின்னா படமும் நல்லாத்தான் இருக்கும் என நம்பி உட்கார்ந்தோம்.
போதாக்குறைக்கு ‘எனது குருநாதர் கே.பாலசந்தருக்கு இப்படம் சமர்ப்பணம்’ என டைட்டில் கார்டில் போட்டார். அடடா.. அப்படின்னா படம் இன்னும் சூப்பரா இருக்கும் போல நிமிர்ந்து உட்கார்ந்தா…. க்ளைமாக்ஸ் வரை குனிய வச்சு குத்து குத்துன்னு குத்துறாய்ங்க. இடையிடையே துஷ்யந்த்—கேப்ரில்லா, சங்கர்நாக்-ஹரிப்ரியா லவ் எபிசோட் இருந்ததால கொஞ்சம் தப்பிச்சோம். அதுகூட பல இடங்களில் எரிச்சலைக் கிளப்பிவிட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படம் முழுக்க வெள்ளை வேட்டி—சட்டையில் ராதாரவி. வழக்கம் போல தெனாவெட்டுப் பேச்சு, அப்பப்ப “டேய் ஒழுங்கா இல்லேன்னா தொலைச்சுப்புடுவேன்” ன்னு மிரட்டல், துஷ்யந்திடமும் சங்கர்நாக்கிடமும் பாசம் காட்டும் கனிவு இதெல்லாம் ஓகே.தான். ஆனா ராதாரவி மட்டும் வலுவா இருந்தா போதுமா? திரைக்கதையில் வலு வேண்டாமா டைரக்டரே? திக்குவாய் சரண்ராஜும் அவரது மனைவி மகேஸ்வரியும் சுமார் ரகம் என்றால், மகேஸ்வரியின் தம்பியாக நடித்திருப்பவர் நம்மை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டுபோய்விட்டார்.
சீன்களை பிட்டு பிட்டாக எடுத்து எல்லாத்தையும் ஒட்டவச்சு ஒரு படமாக்கியிருக்கிறார்கள்.
‘இது ஜெயவேல்முருகன் படம்’ என டைட்டில் கார்டில் போட்டார்கள். அந்தளவுக்கெல்லாம் ஒர்த் இல்ல டைரக்டரே…
— மதுரை மாறன்.