வனத்துறையின் வேட்டைக்காரன் ! நாக சதீஷ்  IFS !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கல்வி ஒருவரை எத்தனை உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் திண்டுக்கல் வனத்துறையின் DFO வாக இருக்கும் நாக சதீஷ்  IFS.

2015 ஆம் வருட டைரக்ட்  IFS அதிகாரியான  இவர் பொறியியல் பட்டப்படிப்பில்  (B.Tech ) முத்திரையை பதித்தது தாய் மண்ணான தெலுங்கு தேசத்தில்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

முதல்  முதுகலை பட்டத்தை  ( M.Tech) பிரபல அறிவு பட்டறையான IITயில் (Rourkela ) முடித்தவர். பின் சிறிது காலம் கார்டன் சிட்டியான பெங்களூரில்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணி புரிந்தவர். 2015 இல் தன் கனவான UPSC யை வெற்றிகரமாக எதிர் கொண்டு வனத்துறைக்கு (IFS) வேட்டைக்காரனாக அமர்த்தப்பட்டார். ஆனால் இவர் வேட்டையாடியது வன விலங்குகளை அல்ல , துறையிலுள்ள தரங்கெட்ட , கிரிமினல் குணம் கொண்ட மனித மிருகங்களை தான்.

திருச்சியின் ( DFO ) வன அலுவலரகவும் , காஞ்சி மாவட்டத்தின் வன அலுவலராகவும் , நாகப்பட்டினத்தில் வனவிலங்கு காப்பகத்தின் வார்டனாக ( Wild Life Warden  )  வலம் வந்தவர் ,  அப்படியே அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குனராகவும்  இருந்திருக்கிறார் .

போட்டியாளர்களை எல்லாம் புறந்தள்ளி, இன்று பெர்பார்மென்ஸில் பின்னியெடுத்துக் கொண்டிருக்கிறது திண்டுக்கல் டிவிஷன். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, திண்டுக்கல் வனக்கோட்டத்தைச் சேர்ந்த ஒரு வனத்துறை அலுவலரும், ஒரு உள்ளூர் சமூகக் குழுவும் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் தேசிய அளவிலான அங்கீகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தமிழ்நாடு வனத்துறைக்கும் திண்டுக்கல் வனக்கோட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் சாதனையாகும். வனவிலங்கு பாதுகாப்பு, வேட்டையாடுதல் தடுப்பு மற்றும் மனித–வனவிலங்கு மோதலைக் குறைப்பதில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகள் இந்த அங்கீகாரத்திற்குக் காரணமாகும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கன்னிவாடி வனப்பகுதியில் இயற்கையான நீரோடைகளின் தடைகளை அகற்றி, எட்டு முக்கிய நீரோடைகளுக்கும் மேலாக நீரோட்டத்தை மீட்டெடுத்தல், யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மூன்று விரைவு நடவடிக்கைக் குழுக்களை (RRT) அமைத்தல்,

125 யானை விரட்டும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் 20 கி.மீ. நீளத்திற்கு சூரியசக்தியால் இயங்கும் தொங்கும் வேலிகளை அமைத்தல் போன்ற பணிகளில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வனத்துறைக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல், சிறுமலை மலைப்பகுதியைச் சேர்ந்த பொன்னுருவி சூழல் சுற்றுலா மேலாண்மைக் குழு (Ponnuruvi ETMC) சமூகப் பங்களிப்புடன் கூடிய வனப் பாதுகாப்பு விருது” என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பும், உள்ளூர் மக்களின் பங்களிப்பும் இணைந்தால் வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் மனித–வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் சிறப்பான பலன்களை அடைய முடியும் என்பதற்கு இந்த அங்கீகாரம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.