இந்திய சினிமாவில் இம்பார் டெண்ட் சினிமா ‘இம்மார்டல்’
‘ஏகே பிலிம் ஃபேக்டரி’ அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி த்ரில்லராக உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ வரும் செப்டம்பர் 04- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(ஆக. 30) நடந்தது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்
“படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்.
‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது”.
ஜி.வி. பிரகாஷ்
“சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் த்ரில்லராக வும் இருக்கும். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை”.
இயக்குநர் மாரியப்பன் சின்னா
“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் நடிக்க ஒத்துக் கொண்ட ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றி.
‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்”.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
“இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்., இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும்”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.