காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் …
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு “Operation Prevail” என்ற பெயரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 20.05.26 மற்றும் 21.05.26 ஆகிய இரு தினங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு அதில் திருச்சி 15, புதுக்கோட்டை 2, கரூர் 10, பெரம்பலூர் 5, அரியலூர் 13, தஞ்சாவூர் 5, திருவாரூர் 5, நாகப்பட்டிணம் 4 மற்றும் மயிலாடுதுறை 8 ஆக மொத்தம் 67 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை 5, கரூர் 2, தஞ்சாவூர் 5, திருவாரூர் 8 மற்றும் நாகப்பட்டிணம் 3 ஆக மொத்தம் 23 குற்றவாளிகளை நிர்வாகத்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி ஒரு வருட காலத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.