பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பேட்டி…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் துகின்சின்ஹா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: –

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டன. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதால் தான். குறிப்பாக நவீன போதைப் பொருட்களின் பயன் பாடு இளைஞர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி வரையறை மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும்.

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் மதிக்கிறது. தொகுதி வரையறை மூலம் தமிழகத்துக்கு 59 தொகுதிகள் வரும்.கூடுதல் தொகுதிகள் கிடைப்பதை திமுக அரசு ஏன் எதிர்க்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. வட மாநிலங்களை விட தென்மாநிலங்களுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வரும். ஆனால் திமுக இதை தலைகீழாக புரட்டிபோட்டு பொய் தகவல்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மத்திய அரசு நல்ல திட்டங்கள் எதை கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக எதிர்த்து பிரச்சாரம் செய்வதை திமுக வாடிக்கையாக கொண்டுள்ளது, என்றார்.பேட்டியின்போது மாநில மக ளிர் அணி செயலாளர் ராதா நிரஞ்சனி,ஊடக தேர்தல் பிரிவு பொறுப்பாளர் கோபிநாத், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் திருவரங்கம் முரளி, வழக்கறிஞர் பிரிவு பிரபாஷனி ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.