அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இருமேனி ஒரு புதிர் !

இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! பாகம் – 02

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

நமது தாய்மொழியில் இருமேனி என்றால், “இரண்டு மேனிகள்” என்பது பொருள். இது மனிதர்களுக்கும், மற்ற உயிர் இனங்களுக்கும் பொருந்தும். இருமேனி என்ற பெயர் மிகவும் புதிரானவை எமது பகுதிக்கு. பெயரின் நேரடியான அர்த்தம் எளிதில் விளங்கினாலும் சுற்றிலும் உள்ள மற்ற ஊர்களை ஒப்பிடும்போது இருமேனி என்ற பெயர் வித்தியாசமாகத் தெரியும். இந்த ஊர் மக்கள் இருமேனிகளைக் கொண்டவர்களா என்று கேட்கத் தோன்றும்?
இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம்வரை உள்ள ஊர்களின் பெயர்களை ஒப்பிட்டால் வித்தியாசம் தெளிவாக விளங்கும்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

உதாரணமாகப் பட்டினம் காத்தான், குயவன்குடி, ஆத்தாங்கரை, பனைக்குளம், அழகன் குளம், சாத்தான் குளம், செம்படையார் குளம், தாமரைக்குளம், புதுமடம், நாரையூரணி, நொச்சியூரணி, எண்மனங்கொண்டான், பிரப்பன் வலசை, அலிலெப்பை வலசை, சுந்தரமடையான், மண்டபம், தங்கச்சி மடம், மரைக்காயர் பட்டினம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஊர்களின் பெயர்கள் அர்த்தம் விளங்கக் கூடியவைகள். வழக்காடுகளில் உள்ள பெயர்கள். மூல வார்த்தைகள் என்ன, எப்படி இந்த ஊர்களின் பெயர்கள் உருவாகி இருக்கக்கூடும் என்று ஊகிக்கமுடியும். ஆனால் இருமேனி அப்படி இல்லை ஒரு புதிராகவே உள்ளது, தெரிகிறது.
சிறுவயதிலிருந்தே இருமேனியின் தோற்றத்தை அறியவேண்டும் என்ற எண்ணம், அவா எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பல ஆண்டுகள், பல பேர்களிடம் பேசி இருக்கிறேன். பலபேரும் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த தொடர் முயற்சி மற்றும் ஆராய்ச்சிகளுக்குப்பின் எனது ஊர் பெயரின் தோற்றத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அதன் விவரங்களை இங்குக் காணலாம்.
3.0 இருமேனி மக்களின் அனுமானங்கள்
எனது ஆராய்ச்சியின் தொடர்ச்சிகளை, முடிவுகளை எழுதுவதற்கு முன் எமது ஊர்மக்கள் மற்றும் முன்னோர்கள் இருமேனி பெயர் எப்படி உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினேன். அவர்களின் சிந்தனை துளிகளைக் கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.
3.1 திருமேனிதான் இருமேனி
இருமேனியின் ஆரம்பப் பெயர் திருமேனி, அதுதான் உண்மையான பெயர். நல்ல பெயர், நல்லவர்களால் சூட்டப்பட்ட பெயர். காலப்போக்கில் திருமேனி இருமேனியாக மருவிவிட்டது. ஆகவே இன்றைய இருமேனியை திருமேனி என்று தான் அழைக்கவேண்டுமென்று ஒருசாரார் கூறியும், ஆரம்பகாலங்களில் பயன்படுத்த முயற்சியும் செய்துள்ளனர்.
3.2 இருமேனியாரின் வருகை
இருமேனியான் என்ற பெயர் கொண்ட ஒரு இந்து சமயப் பெரியவர் தற்போது அமைந்திருக்கும் பள்ளிவாசல் ஊருணி இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் சாதியின் காரணமாக, ஊருக்கு வெளியில் தனிகுடிசையும், குளமும் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும், அவன் இறந்ததற்குப் பின் அந்தப் பகுதி இருமேனி என்று அழைக்கப்பட்டதாகவும் பெரியோர்கள் சொல்லிதான் அறிந்ததாகவும் இருமேனியின் மறைந்த ம.கு.ஜலில் கூறினார். அவரின் கூற்றுப்படி பார்த்தால் இருமேனியான் இருந்த பகுதியில் ஏற்கனவே முஸ்லீம் மக்கள் அதிகம் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களின் பள்ளிவாசல் ஊருணி அங்கு இருந்ததாகவும், இருமேனியின் சமுதாய வழக்குப்படி அவன் ஊரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்ததாகவும் கூறுவதால், அவரது காரணம் ஒப்பு கொள்ளகூடியதாக இல்லை. மேலும் நான் அறிந்த வரைக்கும் இருமேனியான் என்ற பெயர் தமிழ் இந்துக்கள் சமுதாயத்தில் இருந்ததாகவும் தெரியவில்லை. ஆகவே இந்தக் காரணமும் சரி என்று தோன்றவில்லை.
சிவபெருமானின் திருமேனி இருமேனி … இருமேனியின் சரித்திரச் சண்டை … கடல் சங்குடன் இருமேனி தொடர்பு குறித்து அடுத்த தொடரில் பேசுவோம்.
தொடரும் …

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.