திருநங்கை – திருநம்பிகளால் சித்திரவதைக்குள்ளாகும் சிறைப்பணியாளர்கள் !

ஜெயில் பரிதாபங்கள் – 06

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சமீபகாலமாகவே சிறையில் விசாரணை கைதிகளாக அனுமதிக்கப்படும் திருநங்கை, திருநம்பி சிறைவாசிகளால் சிறைக்காவலர்கள், சிறை அதிகாரிகள் என சீருடை பணியாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களை சிறை நிர்வாகம் கட்டுப்படுத்த இயலாமல் தினருகிறது.  திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதே கைதி புழல் சிறையில் அதே குற்றச்சாட்டை கூறி அந்த காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த கதை யாரால் உருவாக்கப்பட்டு அரங்கேற்றமானது என்பதை தனிப்பதிவாகவே பிறகு பார்க்கலாம்.

பீடி, கஞ்சா கொடுத்தால் எதையும் கூற தயங்காத அவர்கள். கஞ்சா கொடுக்கும் அதிகாரியின்  அறிவுரைப்படி அப்படியே செய்வார்கள். கண்காணிப்பாளர் அடித்தார், சிறை அலுவலர் அடித்தார், காவலர்கள் அடித்தார்கள் என்று அவர்கள் அழுது நடித்தால் போதும் நீதிபதிகள்  அதை உண்மை என உறுதி செய்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரையை கண்மூடித்தனமாக செய்வார்கள். விசாரித்து உண்மைத்தன்மையை ஆராயமாட்டார்கள். இவர்கள் நம்புபடி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். சிறை அதிகாரிகளிடமும், சிறை பணியாளர்களிடமும் சில வழக்கறிஞர்கள் பேரம் பேசி பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஒரே நேரத்தில் பத்து கைதிகள்கூட காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படும். அதுகுறித்து எந்த விசாரணையுமிருக்காது. ஆனால், சிறையில் மாலை அடைப்புக்கு அறைக்குள் போ என்று கூறினாலே போதும்,  வழக்கறிஞர் வந்து விடுவார், நீதிபதி வந்துவிடுவார், மனித உரிமை பேசும் ஆணையம் வந்துவிடும், நமது உளவுபிரிவு வந்துவிடும், அறிக்கை பறக்கும் அடுத்த நொடி சஸ்பென்ட், ஒழுங்கு நடவடிக்கை என அனைத்தும் அனலாய் பறக்கும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த கைதி ஆபாசமாக பேசலாம், ஆபாசமாக நடக்கலாம், அத்துமீறலாம், அடங்க மறுக்கலாம், சிறை அதிகாரிகளின் மனைவி மக்களை பேசலாம், காவலரை அடிக்கலாம், சட்ட விதிகளை மீறி வம்பிழுக்கலாம் அனைத்துக்கும் சிறைபணியாளர்கள் அடங்கி அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதனால்தான் இதற்கு பெயர் சீர்திருத்தத்துறை என மாற்றப்பட்டது. இப்படி இருந்தா நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி சீர்படும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

நாம் தெரிந்தோ, தெரியாமலோ இந்த வேலைக்கு வந்துவிட்டோம். வேறுபணிக்கு செல்லமுடியாது. நம் குடும்பத்தை பராமரிக்க, காப்பாற்ற  சம்பளம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் சிறைத்துறை போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

கைதி ஒருபுறம், அவரது வழக்கறிஞர்கள் ஒருபுறம், அதிகாரம் படைத்த அதிகாரிகள் ஒருபுறம், நீதிமன்றம் ஒருபுறம், இவர்களுக்கிடையே உளவு பிரிவு ஒருபுறம், அவர்கள் அளிக்கும் அறிக்கையால் விளக்கம் கேட்டு அச்சுறுத்துவது ஒருபுறம் என திரும்பும் திசையெல்லாம் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள் சிறைப்பணியாளர்கள்.

–              கருணாமூர்த்தி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.