களத்தில் கலைமகள் சபா ஒரு நபர் ஆணையர் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கலைமகள் சபா சொத்துக்களை பாதுகாத்து, வெளிப்படையான பொது ஏல அறிவிப்பில் விற்பணை செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கில், ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது.

கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஒரு நபர் ஆணையர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர், கடந்த ஜூன்-13 அன்று திருச்சியில் கலைமகள் சபா உறுப்பினர்களை சந்திக்கும் கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே, கடந்த ஜன-15 மற்றும் மே-29 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரிலும்; திருச்சி கூட்டத்தை தொடர்ந்து ஜூன்-18 அன்று தூத்துக்குடியிலும்; ஜூன்-22 அன்று திருநெல்வேலியிலும் கள ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். இந்த கள ஆய்வில், கலைமகள் சபாவின் சொத்துக்களில் சில, நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருப்பது மற்றும் அவற்றின் சட்டப்பூர்வ நிலை குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர். மூன்றாம் நபர் வழக்குகளில் சிக்கிய சொத்துக்கள்; ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை கண்டறிந்து அவற்றை கைப்பற்றி பாதுகாக்கும் நோக்கிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.