அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கலைமகள் சபா : எங்களை கேட்காமல் எப்படி முடிவெடுப்பீர்கள் ?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தமிழகத்தில் தெளிவான ஒரு முடிவை எட்ட முடியாமல், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்து வரும் விவகாரமாக நீடித்து வருகிறது, கலைமகள் சபா மோசடி விவகாரம்.

உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில், ஓய்வுபெற்ற தனிநீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு கலைமகள் சபாவின் சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று கலைமகள் சபா உறுப்பினர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்நிலையில், கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களின் சார்பில் ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் சில கேள்விகளை முன்வைக்கிறார். அங்குசம் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

அதில், ”35 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் மெயின் ரோடுகளில் வாங்கிப்போட்ட சொத்துக்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. நிலமாக பிரித்துக்கொடுக்காமல், விற்று பணமாக  பிரித்துக் கொடுக்க யார் முடிவு எடுத்தது? யாரை கலந்தாலோசித்தார்கள்? ஏற்கெனவே அரசு அமைத்த ரிசீவர் குழு சுமார் 870 ஏக்கர் கலைமகள் சபா சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கே போனது? இப்படி தனி அலுவலர்களும் ரிசீவர்களும் அரசாங்கமும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் சொல்லாமல் அதை பிரித்துக் கொடுக்காமல் இருப்பது முறையல்ல.  கோவை சக்தி என்பவர் தொடுத்த வழக்கில் 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு சொன்னார்கள். 2021 இல் தீர்ப்பு வந்தும் நான்கு வருடங்களாயிற்று. ஆனாலும், இன்னும் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

நாங்கள் கேட்பதெல்லாம். ஒன்று, சென்னையிலுள்ள கலைமகள் சபாவின் தலைமை அலுவலகத்தில் தற்போது வெளி நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது கலைமகள் சபா உறுப்பினர்களின் சொத்து. ஆகவே, எங்களது உறுப்பினர்களும் அவர்களது வாரிசுகளும்தான் அங்கே பணிபுரிய வேண்டும். அடுத்து, முறையாக சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். மாவட்டம் தோறும் மண்டலம் தோறும் முறையான பத்திரிகை அறிவிப்பை செய்து இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும். அவ்வாறு உறுப்பினர்களை கூட்டி, கலைமகள் சபாவின் உறுப்பினர்களை முறையாக கணக்கெடுக்க வேண்டும். உறுப்பினர்களிலேயே பல்வேறு வகையினர் இருக்கிறார்கள். அதன்படி உறுப்பினர்களை வகைப்படுத்த வேண்டும். அடுத்து கலைமகள் சபாவின் சொத்துக்களை கண்டறிய வேண்டும். அந்தந்த மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரித்துக் கொடுக்க வேண்டும்.

மேலும், இதற்கு தீர்வாக ஐந்து பேர் கொண்ட கமிட்டியை உருவாக்க வேண்டும். அதில் கலைமகள் சபா உறுப்பினர்கள் இரண்டு பேர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அப்புறம் ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு ரிட்டயர்டு ஐ.பி.எஸ் அதிகாரி, ஒரு ரிட்டயர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி இருக்க வேண்டும். எங்களுக்கு பணம் வேண்டாம். சொத்துதான் வேண்டும்.” என்கிறார், ஈரோடு பழனியப்பன்.

முழுமையான வீடியோவை காண

 

–             அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.