அவரு படிச்ச வாத்தியார்கிட்டதான் நானும் பாடம் படிச்சிருக்கேன் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

”முப்பது வருஷம் திமுகவுல இருந்துட்டு, மூனு மாசத்துக்கு முன்னாடி த.வெ.க.வுல சேர்ந்து மதுரை கிழக்கு தொகுதியில போட்டியிடுறேனு எனக்கு எல்லா வகையிலும் குடைச்சல் கொடுக்கிறாங்க”னு வெடிக்கிறார், சோ.கார்த்திகேயன்.

திமுகவில், மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர், மதுரை திட்டக்குழு துணைத்தலைவரா 5 ஆண்டுகள், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளராக, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராக 12 ஆண்டுகள் என திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்தான் இப்போது த.வெ.க.வில் ஐக்கியமாகி, மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சோ.கார்த்திகேயன்
சோ.கார்த்திகேயன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“அமைச்சரோட சொந்த தொகுதியிலேயே எவ்வளவோ மக்கள் பிரச்சினை இருக்குது. இன்னும் மின்சார வசதியே இல்லாத  கிராமங்கள் இருக்கு. பஸ் வசதியில்லாம ரெண்டு கிராமத்தை தாண்டி வந்து பஸ் ஏறுற அவலமும் இருக்கு. 35 தெருவுல குடிக்கிற தண்ணீர் குழாயே இல்லை. இதெல்லாம் பத்து வருஷமா அமைச்சரா இருக்கிற மூர்த்திக்கு தெரியுமா? இதையெல்லாம் கண்டறிந்து சரி செய்வதற்கு பதிலாக, தேர்தல் வேலை பார்க்க எனக்கு வீடு கொடுக்காதீங்கன்னு வீட்டு உரிமையாளரை ஆள் வச்சி மிரட்டுறாரு மூர்த்தி”னு வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்துகிறார், கார்த்திகேயன்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

“நானும் அண்ணன் அழகிரி ஆதரவாளர்தான். அமைச்சர் மூர்த்தி படிச்ச அதே வாத்தியார்கிட்டதான், நானும் பாடம் படிச்சிருக்கேன். அவரு என்ன பன்னுவாருனு எனக்கும் தெரியும். நான் என்ன பன்னுவேனு அவருக்கும் தெரியும்”னு நேரடியாகவே சவாலும் விடுகிறார் கார்த்திகேயன்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.