ஏசி.சண்முகம் ஆசியுடன் தயாரிப்பாளரானார் குஷ்பு மகள்!
டோட்டலி டிஃபெரெண்டான கதைக் களத்தில், [அதாவது மாலை ஆறு மணிக்கு மேல் ஆண் பெண்ணாவதும் பெண் ஆணாவதும்] தயாராகி விரைவில் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது ‘டபுள் ஆக்குபன்ஸி’ [ Double Onnupancy] என்ற படம். குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ், ஏசி. சண்முகத்தின் பென்ஸ் மீடியா தயாரித்திருக்கும் இப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் ஹீரோவாக ‘பொன்னியின் செல்வனில்’ சின்ன கேரக்டரின் மூலம் புகழ்பெற்ற சந்தோஷ் நடிக்க, ஹீரோயின்களாக சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் விடிவி கணேஷ், பகவதி பெருமாள், வினோத் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : சாந்தகுமார் சக்கரவர்த்தி, இசை : சாம்.சிஎஸ், பி.ஆர்.ஓ : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.
குஷ்பு-சுந்தரின் மகளான அனந்திதா சுந்தர் தான் இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’யின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.26-ஆம் தேதி இரவு நடந்தது. தனது மகள் அனந்திதாவை பெருமைப்படுத்தும்விதமாக படக்குழுவினருடன் குஷ்பு சுந்தரும் கலந்து கொண்டனர்.
அனைவரையும் வரவேற்று முதலில் பேசினார் அனந்திதா சுந்தர்.

“ஏசி சண்முகம் சாரால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அவரால் தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர், ஆர்டிஸ்ட், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி. சில நல்ல விஷயங்கள் தானாக நடக்கும் என்று சொல்வார்கள். அது போலத்தான் இந்தப் படம் எங்களுக்கு அமைந்தது. மீடியாக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறேன்”.
பகவதி பெருமாள், “அடுத்த ஜெனரஷேனுக்கான கதை சொல்லும் படம் இது”.
ரேஷ்மா வெங்கடேஷ், “ஒன்றரை வருடப் பயணம் இது. ரஜினி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். அனைவரின் கடின உழைப்பும் இதில் இருக்கு”. சம்யுக்தா விஸ்வநாத், “மீடியாக்களும் மக்களும் இந்தப் படத்திற்கு சப்போர்ட் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”.
சந்தோஷ், “பள்ளிப்பருவத்திலிருந்தே அனந்திதாவை எனக்குத் தெரியும். எனக்கு நல்ல தோழியான அவர் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. குஷ்பு மேடம் தான் எனக்கு மாபெரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இந்தக் கதை மட்டுமல்ல, அஸ்வின் கந்தசாமி வைத்திருக்கும் எல்லாக் கதைகளுமே மிகவும் சிறப்பானது”.
கேமராமேன் சாந்தகுமார்,”இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது எனது அப்பா-அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்கள். அப்போது குஷ்பு மேடம், “நீ எப்ப மனசு ரிலாக்சாகி வர்றியோ அப்ப ஷூட்டிங்கை வச்சுக்கலாம் எனச் சொன்னார்கள். அவரின் பெரிய மனசுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்”.
அஸ்வின் கந்தசாமி, “ஒன்பது வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் இதான் எனக்கு முதல் மேடை. இதற்கு காரணம் குஷ்பு மேடம் தான். அதே போல் மேடையில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்த சுந்தர் சி.சாருக்கும் நன்றி. இதை ஷாட் பிலிமா எடுக்கலாம் என நான் நினைத்த போது, முழு நீள சினிமாவாக எடுக்கத் தூண்டியது சந்தோஷ் தான். அதனால் அவரையே ஹீரோவாக்கிவிட்டோம். எங்களின் புதிய முயற்சிக்கு மீடியாக்கள் ஆதரவு தரவேண்டும்”.
குஷ்பு சுந்தர், “எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் தான், பையன் கிடையாது. அதனால் சந்தோஷ் தான் எனது மகன். அவனும் அனந்திதாவும் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ். ஆனா எப்போதுமே எலியும் பூனையும் போலத்தான் இருப்பார்கள். சந்தோஷை எங்கள் பேனரில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. ‘பொன்னியின் செல்வனில்’ எனது மகள் அனந்திதா வேலை பார்த்தாள். ஆனால் டைட்டில் கார்டில் அவள் பெயரை போடவில்லை. இப்போது கிரியேட்டிவ் தயாரிப்பாளர் என்ற டைட்டில் கார்டைப் பார்த்ததும் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் இருந்ததால் நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே போகவில்லை.
நம்ம பிள்ளைகள் வளர்ந்து நல்ல இடத்திற்கு வருவதைப் பார்ப்பதைவிட பெத்தவர்களுக்கு பெரிய சந்தோஷம் வேறெதுவும் இருக்க முடியாது. எங்களது பி.ஆர்.ஓ.ரியாஸின் மகள் பாரஸை குழந்தையிலிருந்து பார்க்கிறேன். இப்போது அவள் வளர்ந்து அப்பாவுக்கு சப்போர்ட்டாக இருக்கிறாள். ஜென் ஸிக்களிடம் நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். டைரக்டர் அஸ்வின் கந்தசாமி மிகவும் திறமைசாலி. இதில் எல்லா அம்சங்களும் இருக்கு, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.