சட்டசபையில் ரோட்டரியன்கள் !

தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் அமைந்திருக்கும் புதிய ஆட்சியில், இளைஞர்கள், பெண்கள், பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள் பலரும் எம்.எல்.ஏ.வாக அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள் என்றெல்லாம் பல்வேறு புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள்.

இந்நிலையில், தற்போதைய 17-வது சட்டசபையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ரோட்டரியன்கள். ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த விழாவில், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவரும், இயக்குநர்களில் ஒருவரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.