விஜய்க்கு ஓட்டு போட்டுத்தான் பார்ப்போமே …!
உங்களுக்கு ஓர் எச்சரிக்கை! விஜய்க்கு ஓட்டு போட்டு பார்ப்போம் என கொஞ்சமும் அதன் பின் விளைவுகளை அறியாமல் விபரீத முயற்சி செய்பவர்கள் சிந்தனைக்கு. இப்படி விஜய்க்கு போகும் குறைந்தபட்ச ஓட்டுக்களால் விஜய் நிச்சயமாக வெற்றி பெற போவதில்லை. ஆனால், இப்படி பிரிந்து போகும் மதசார்பற்ற வாக்குகளால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்து, பிஜேபி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.
முதலில் இஸ்லாமியர்களின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும். பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும். ஆங்காங்கே மதக்கலவரம் வெடிக்கும்.
சிறுபான்மையினர் தனிமைப்படுத்த படுவார்கள். கிறிஸ்தவ மிஷினரிகள் குறிவைக்கப்படும். முஸ்லிம் கிறித்தவ வழிபாட்டு தளங்கள் சூறையாடப்படும். பட்டியலின மற்றும் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் உணவான மாட்டிறைச்சிக்கு தடை வரும். தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாகி விடும். இதெல்லாம் கற்பனையில் சொல்லவில்லை! பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் நடந்தேறியவை நடந்து கொண்டிருப்பவைகளும் தான் இவைகளெல்லாம்.
சும்மா “பிஜேபி வந்துவிடும்” என்கிற பூச்சாண்டி இல்லை இதெல்லாம்… வந்தா தாண்டா அவனுகளோட காட்டுமிராண்டி ஆட்சி உங்களுக்கு தெரியும்.
இந்த பிஜேபி “வந்து விடும்” என்கிற வார்த்தையே உங்களுக்கு கேலியும் கிண்டலுமாக தெரிகிறது. பிஜேபியின் ஆட்சியில் கணவனின் முன்பு மனைவியும் தகப்பனின் முன்பு மகளும் மகனின் கண் முன்னாடியே தாயும் கற்பழிக்கப்பட்ட வரலாறுகள் தெரியாதா? கிறிஸ்துவ மத போதகர்கள் தீக்கிரையாவது தெரியாதா? தலீத் மக்கள் சொல்லொன்னா கொடுமைகளுக்கு ஆளாவது தெரியாதா? பாசிசமா? பாயாசமா? என விஜய் அடுத்த படம் நடிக்க போய் விடுவார்.
பிராமண கடப்பாரையை கொண்டு திராவிடத்தை வீழ்த்தி விட்டேன் என்கிற வெற்றி களிப்பில் சீமான் போய் விடுவார். இங்கே நம் அடுத்த தலைமுறையை பாதுகாப்பற்ற சூழலில் தவிக்க விட்டு நாம் போயாக வேண்டுமா?நாங்கள் ஃபிரவ்னை பார்த்த பரம்பரை, அபுஜஹிலை பார்த்த பரம்பரை என வீராவசனம் பேசுவதும், ஏன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லையா என மார்க்க லாஜிக் பேசுவதும் வர விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பொருந்தாது.
வரும் முன் சிந்தித்து நடப்பது தான் பகுத்தறிவு மார்க்கம் சொல்லி கொடுத்த பாடம். இதுவரை நீங்கள் விஜயின் ஆதரவாளராகவோ சீமானின் ஆதரவாளராகவோ இருங்கள். இனிமேலும் இருந்து விட்டு போங்க. ஆனால், உங்களுடைய ஓட்டையும் உங்கள் குடும்பத்தாரின் ஓட்டையும் பாசிச பிஜேபி அதிமுக கூட்டணிக்கு எதிராக களமாடி கொண்டு வெற்றிக்கு நெருக்கத்தில் இருப்பது எந்த கட்சி என்று உணர்ந்து வாக்கு போட சொல்லுங்கள். இதை நீங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு தெரியாமல், மறைமுகமாக செய்தாலும் சரியே.
இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன். எடப்பாடியின் குடுமி குருமூர்த்தி வகையறாக்களின் கையில் இருக்கிறது. அவர்கள் போடும் தாளத்திற்கு நடனமாடுவது தான் எடப்பாடியின் வேலையே தவிர, தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. எனவே, இந்த தேர்தலில் தவறான முடிவை எடுத்து வரலாற்று பிழையை செய்து விடாதீர்கள்.
– கிறிஸ்டோபர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.