அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பரமசிவபுரத்தை சேர்ந்த இறந்துபோன பாரத்திபன் (எ) கணேசன் 48/20, த.பெ பிச்சை என்பவரின் மகன் ஆகாஷ் என்பவர் எதிரி-1 குமார் (எ) முக்காடு குமார் 52/25 த.பெ சுந்தரம், ரோஸ் கார்டன், லால்குடி என்பவரின் மகளை காதலித்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 09.09.2020-ம் தேதி அன்று எதிரி-1 குமார் (எ) முக்காடு குமார் என்பவர் எதிரி-2 நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ் 39/25 த.பெ பெரியசாமி, தெற்கு தெரு. லால்குடி ஆகிய இருவரும் லால்குடி, சுண்ணாம்புகார தெரு பகுதியில் பாரத்திபன் (எ) கணேசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன பாரத்திபன் (எ) கணேசன் என்பவரின் சகோதரர் மோகன் 52/25 த.பெ பிச்சை கொடுத்த புகாரின் அடிப்படையில், . 1613/20, U/s 341, 302 IPC ன் படி வழக்கு பதிவு செய்து, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாம்பு நாகராஜ், முக்காடு குமார்
பாம்பு நாகராஜ், முக்காடு குமார்

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்  (26.06.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) அவர்கள் எதிரிகள் 1. குமார் (எ) முக்காடு குமார், எதிரி-2 நாகராஜ் (எ) பாம்பு நாகராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 1000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் அழகர் மற்றும் லால்குடி காவல் நிலைய நீதிமன்ற காவலர் பிரபாகரன்  ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.