நம்பிக்கையை ஊடகங்களே உடைத்துக்கொண்டு இருக்கிறது

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இந்தியாவின் பிரபல ஊடகமான இந்தியா டுடே, ஜெம் நிறுவன வீரமணி சிறுமியுடன் கட்டிலறையில்  இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை தந்துள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு என்பதால் சட்டப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தி வெளியிடக்கூடாது. ஆனால் அதை  அப்பட்டமாக மீறியுள்ளது. இது பத்திரிக்கை அறத்தையும் மீறிய செயல். வழக்கமாக பிராந்திய மொழி ஊடகங்கள் தான் இதுபோல் செய்தி வெளியிடுவார்கள். ஆங்கில ஊடகங்கள் எந்த செய்தியாக இருந்தாலும் சட்டம், அறத்தின்படியே செய்தி வெளியிடும். ஆனால் ஒரு சிறுமியின் வீடியோவை வெளியிட்டதோடு அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாய்ந்து மாய்த்து விளக்கம்  வீடியோ வெளியிடுகிறார் அந்த செய்தியாளர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சமூக ஊடகங்களில் பிரபலத்துக்காக வீடியோ போடுபவர்களை பார்த்து செய்தியாளர்கள் மாறியுள்ளார்கள். சமூக ஊடகங்கள் என்பதும், ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகங்கள் என்பதும் வெவ்வேறு. சமூக ஊடகங்களில் வீடியோ போடுபவர்களை பார்த்து இவர்களும் கண்டதையும் கக்க தொடங்கியுள்ளார்கள். அதற்கு ஆசிரியர் குழுவும் உடந்தையாக இருக்கிறது. சமூக ஊடகத்தில் ‘செய்தி’ எழுதுபவர்களுக்கு, வீடியோ போடுபவர்களுக்கு சமூகப் பொறுப்பு என்று எதுவும் கிடையாது. ஊடகங்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு ஊடகங்களுக்கும் ஒரு அரசியல் சார்பு, மதச்சார்பு, இன சார்பு இருந்தாலும் செய்திகள் என வரும்போது குறைந்தபட்ச ஊடக அறத்தை கடைபிடிக்கும். ஆனால் அதற்கு நேர்எதிராக இந்தியா டுடே நடந்தது தான் அதிர்ச்சியே. அவர்கள் மட்டுமல்ல பிராந்திய ஊடகத்தை பார்த்து நேஷ்னல் ஊடக முதலாளிகளும், ஆசிரியர் குழுவும், செய்தியாளர்களும் மிக மோசமான இடத்திற்கு வந்துள்ளார்கள். தகுதியானவர்கள் ஊடகத்தில் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒரு அரசியல் விவாத நேரலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நெறியாளர் கேட்கிறார், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடவில்லை என. அந்த கேள்வியை அவர் கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டேன். குறைந்தபட்ச அரசியல் நாலேட்ஜ் இருந்திருந்தால் கூட இப்படியொரு கேள்வியை கேட்டுயிருக்கமாட்டார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியுமே தனித் தொகுதிகள் அங்கே எப்படி ஸ்டாலின் போட்டியிட முடியும்? இப்படிப்பட்டவர்கள்தான் இன்று ஊடகத்தை வழி நடத்துகிறார்கள், மக்களிடம் கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

இந்த வீழ்ச்சி இன்று நேற்று தொடங்கியதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. நீதித்துறை போல் மக்களின் நம்பிக்கை ஊடகத்துறை இருந்தது. அந்த நம்பிக்கையை ஊடகங்களே உடைத்துக்கொண்டு இருக்கிறது.

—   ராஜ் ராஜபிரியன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.