‘கிறிஸ்டினா- கதிர்வேலன்’ சொல்லப் போகும் முக்கிய சேதி!
ஶ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம், தாராசுரம் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ஜெ.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். படத்தின் இணைத் தயாரிப்பாளர் துர்கா தேவி பாண்டியன்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் அறிமுகமான பிரதிபா இப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன்
சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி எஸ் ஆர், அருள் டி. ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: என். ஆர். ரகுநந்தன் ஒளிப்பதிவு:பிரகத் முனியசாமி, எடிட்டிங் : லோகேஷ்வர், பாடல்கள்: மோகன் ராஜன், கருமாத்தூர் மணிமாறன். தயாரிப்பு மேலாளர்: நமஸ்காரம் சரவணன், போஸ்ட் புரொடக்ஷன்: Bee ஸ்டுடியோஸ், கலரிஸ்ட்: பரணிதர், வி எஃப் எக்ஸ்: ராகவ கோபாலன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
— மதுரை மாறன்.