22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரஷாந்துடன் கைகோர்க்கிறார் ஹரி!
‘அந்தகன்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்தை ஹிட் டைரக்டர் ஹரி இயக்குகிறார். தற்காலிகமாக ‘பிரஷாந்த் 55’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரஷாந்தின் பிறந்த நாளான ஏப்ரல் 06- அன்று பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார் ‘ஸ்டார் மூவிஸ்’ தயாரிப்பாளரும் பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன்.
அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதையுடன் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள,இப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.
22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இயக்குனர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்து நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ பிரஷாந்துடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு கைகோர்க்கிறார் ஹரி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள்- நடிகைகள்,தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைய உள்ளார்கள்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தியாகராஜன்.
— மதுரை மாறன்.