‘மூக்குத்தி அம்மனுக்கு உதவுவாரா பிரித்யங்கரா தேவி?
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் சி. டைரக்ஷனில் நயன் தாரா நடித்து தீபாவளிக்கு ( நவம்பர் 06) ரிலீஸ் ஆகிறது ‘மூக்குத்தி அம்மன்-2’. இப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரித்யங்கரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகமும் வழிபாடும் நடந்தது.
இதில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ், இயக்குநர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகள் சிறப்பான வெற்றியைப் பெறவும் பிரார்த்தனை நடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது ‘ மூக்குத்தி அம்மன் -2 மஹா சக்தி ‘.
— ஆண்டவர்





Comments are closed, but trackbacks and pingbacks are open.