அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக டாக்டர் ஜி. ராமச்சந்திரன் நூலகம் சார்பாக தேசிய நூலகர் தினம் ஆகஸ்ட் 12, 2026 கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் என். பஞ்சநதம் தனது தலைமை உரையில் நூலகங்களின் பயன்பாடு மற்றும் தேசிய நூலகர் தினம் எந்த நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது என்றும், மேலை நாடுகளில் ஒருவர் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 17 க்கும் மேற்பட்ட புதிய நூல்களை படித்து முடிக்கின்றனர் என்ற புதிய தகவல்களையும் தனது உரையில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் முதுமுனைவர் எம். சுந்தரமாரி தனது தொடக்க உரையில் நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும்  கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக நூலக பொறுப்பாளர் முதுமுனைவர் சி.பிச்சை அவர்கள் தனது வரவேற்புரையில் இந்திய நூலகத் தந்தை முனைவர் எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள் நூலகத்திற்கு ஆற்றிய பணிகளையும், நூலகத்தின் ஐந்து விதிகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பல்கலைக்கழக முதுமுனைவர் ஆர்.மணி அவர்கள் தனது பாராட்டுறையில் பல்கலைக்கழக நூலகத்தின் பழமையும் மற்றும் அதன் சிறப்பையும் எடுத்துரைத்தார். பேராசிரியர் ஆர். வெங்கட்ரவி அவர்கள் தனது உரையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் நூலகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிவித்தார்.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை  பேராசிரியர் முனைவர் ஆர்.பாலசுப்பிரமணி தனது உரையில் செயற்கை நுண்ணறிவு காலத்தில் ஆய்வு நெறிமுறைகள், கருத்து திருட்டு சவாலை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்று ஆராய்ச்சி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் டெல்லியில் இருந்து  பைபின் அவர்கள் இ.பி.டபிள்யு.ஆர்.எஃப் தரவு தளம் பற்றியும் மும்பையில் இருந்து குபேந்தர் சிங் அவர்கள் இந்தியா ஸ்டார்ட் தரவு தளம் பற்றியும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இவ்விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  பல்கலைக்கழக நூலகர் ஆர்.யூ.ராமசாமி நன்றி உரை கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.