அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எனக்கு ஆள் தேவையில்லை … நிலம்தான் வேண்டும் ! ஜூலை-03 நீதிமன்ற விசாரணை ! நடந்தது என்ன?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது புகார்களை பதிவு செய்வதற்கு இறுதி வாய்ப்பாக ஜூலை-10 வரை அவகாசம் வழங்கியிருக்கிறது. புகாரை பதிவு செய்வது தொடர்பான வீடியோ, அங்குசம் அறம் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.

இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூலை-02 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஏலத்தில், 5562 பிளாட்டுகள் ஏலம் போயிருக்கின்றன. இதன் மதிப்பு ரூ. 890,13,18,224.00 ஆகும். இதில், மதிப்பை தவறுதலாக பதிவு செய்தது உள்ளிட்டு பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு முதலீட்டாளர்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 200 பிளாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கான சேவைக் கட்டணத்தை இதுவரையில் 1740 பேர் மட்டுமே செலுத்தியிருப்பதாகவும், எஞ்சியவர்களுக்கு பத்து நாள் அவகாசம் வழங்கி கட்ட வலியுறுத்தியிருக்கிறது.

யாவரும் கேளீர்

ஏற்கெனவே, கொடைரோடு டிரைவ் இன் ஹோட்டல், குற்றாலம் ரெசார்ட்ஸ், பேவர் பிளாக் தொழிற்சாலைக்கான ஏல அறிவிப்பு 22.06.2026 இல் வெளியான நிலையில், 22-23.07.2026 இல் அதற்கான ஏலம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நாகநந்தா மில், உலகநேரி, வில்லிசேரி, மாமண்டூர், திருநெல்வேலி துணைநகரம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் தயார்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  சில இடங்கள் மதிப்பீட்டு நடைமுறையில் இருந்துவருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சொத்துகளுக்கும் தனித்தனியாக விளம்பர செலவு செய்வதைவிட, குறைந்தது பத்து இடங்கள் சேர்ந்ததும் மொத்தமாக விளம்பரம் கொடுப்பது என நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

தரிசு நிலங்களை அப்படியே ஏலம் விடுவதற்கு பதிலாக, அவற்றை பிளாட்டுகளாக மாற்றி ஏலம் விட வேண்டுமென்று நியோமேக்ஸ் நிறுவன தரப்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுரையில் உள்ள இடத்தை பிளாட்டுகளாக மாற்றித்தர ஒருவர் நேரடியாக  நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இதுகுறித்து பதிலளிக்க நிறுவன தரப்பில் 15 நாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

பிரத்யேக சாப்ட்வேர் தயாரிப்பது குறித்து, அரசு தரப்புக்கு அழுத்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஒரு சாப்ட்வேர் தற்சமயம் கைவசம் உள்ள நிலையில், அரசு தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து தாங்களே தயாரிப்பதாக முன்வந்ததையடுத்தே நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர்களுக்கான சேவைக்கட்டணத்தை வழங்கவும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இப்பணியை விரைவுபடுத்துமாறும் அரசு தரப்புக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

வெறும் 167 பேர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 3000-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதியரசர், இது எம்.எல்.எம். பாணியில் நடைபெற்றிருக்கிறது. எந்த எல்லை வரை யார் யாரையெல்லாம் குற்றவாளிகளாக சேர்ப்பது என்பது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்தான் முடிவெடுக்க வேண்டும். எனக்கு ஆட்கள் தேவையில்லை. நிலம்தான் வேண்டும். ஏஜெண்டுகளின் சொத்துக்களை அடையாளம் காட்டினால், அவை அட்டாட்மெண்ட் செய்யப்படும். என்பதாக பதிலளித்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி. பத்து பெட்டிசனை படித்து பார்த்தாலே, பல கோடிக்கு சொத்து சேரும் என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

ஏஜெண்டுகள் குறித்த விவாதத்தை தொடர்ந்து, அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு நியோமேக்ஸ் நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்களின் பட்டியலை கேட்ட நீதியரசர் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் என்றார்.

மேலும், இந்த வழக்கை அடுத்தகட்டமாக கொண்டு செல்ல, இந்த வழக்கை கவனிப்பதற்கென்றே தனி எஸ்.பி. மற்றும் தனி டி.ஆர்.ஓ. அவசியம் என்பதை அரசு தரப்புக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த வாய்தா, 10.07.2026 அன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.