தீபாவளிக்கு ஜி-5-ல் ‘நூறு கோடி வானவில்’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

‘மாதவ் மீடியா’ பாலாஜி கபா, ‘அருண் அருணாசலம் புரொடக்‌ஷன்ஸ்’ அருண் அருணாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்’. சசி டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 06-ஆம் தேதி ஜி-5 ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் முழு நீளத்திரைப்படம் இது.

படத்தைப் பத்தி ஜி-5 வணிகப்பிரிவுத் தலைவர் லாயிட் சி.சேவியர் என்ன சொல்றாருன்னா, “காதல் மற்றும் மனித உறவுகளுடன் தொடர்புடைய மென்மையான உணர்வுகள், மகிழ்ச்சி, நிச்சயமற்ற தன்மை குறித்து இப்படம் பேசுகிறது. இதை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

டைரக்டர் சசி,  ஹரிஷ் கல்யாண்
டைரக்டர் சசி, ஹரிஷ் கல்யாண்

டைரக்டர் சசி, “தங்களின் உணர்வுகளைச் சரியாக கையாள்வதுடன் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் எதார்த்தங்களையும் எதிர்கொள்ள  வேண்டிய இரு மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பயணம் தான் இந்த நூறுகோடி வானவில். மனிதர்கள் வளர, வளர உறவுகள் எவ்வாறு மாறுகின்றன, வாழ்க்கை அவர்களுக்கு எத்தகைய கடினமான முடிவுகளைத் தருகிறது என்பதையும் இப்படத்தில் சொல்லியுள்ளேன். இத்துடன் அழகான காதலும் இதில் இருக்கு” என்கிறார்.

நடிகை சித்தி இத்னானி சேலையில் அழகிய போட்டோஷூட்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹீரோ ஹரிஷ் கல்யாண், “நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலைப் பற்றிய புரிதலும் மாறுபடுகிறது.  அதைமட்டும் முன்னிறுத்தாமல், உணர்வுகளும் சூழ்நிலைகளும் சிக்கலாகும் போது மனிதர்கள் எதிர்கொள்ளும் கடினமான முடிவுகளையும் இப்படம் ஆராய்கிறது” என்கிறார்.

—   ஆண்டவர்

 

படங்கள்

டைரக்டர் சசி, ஹீரோ ஹரிஷ் கல்யாண்

ஹீரோயின் சித்தி இத்னானி [ வாய்ப்பிருந்தால் மூன்று படங்களையும் நெட்டில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்]

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.