அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

சமூக வலைதளங்களில் நடிகர் ஜோஸஃப் விஜயை ஆதரிக்கும் இளைஞர்களை, குற்றவாளிகளைப் போல் நடத்துகின்றனர்.!இதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.!உண்மையிலேயே நாம் குற்றவாளியாக பார்க்க வேண்டியவர் Psycho ஜோஸஃப் விஜய்தான்.!

இவ்வளவு நடந்த பிறகும், அந்த இளைஞர்களை ஆசுவாசப்படுத்தும் அளவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாகவோ, ஒரு தன்னிலை விளக்க காணொளி பதிவகவோ போடவில்லை.!இளம் வயதில் எல்லோரும் எப்படி நடந்து கொள்வோமோ அப்படித்தான் அவர்களும் நடந்து கொள்கின்றனர்.!ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்திருந்தால், அவரது ரசிகர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.!

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

90களில் திரு. ரஜினி அரசியலுக்கு வரவேண்டி பலமுறை தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வந்த மருத்துவர்களை பார்த்துள்ளேன்.!திரு. கமலஹாசன் கட்சி ஆரம்பித்த போது, கோயம்புத்தூரில் உள்ள மருத்துவர்கள் கமலஹாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.காரணம், கமலால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியு‌ம் என்று என்னோடு வாதிட்டனர்.!

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எனவே, ஏதோ ஒரு ஈர்ப்பு அவர்களிடத்தில் உள்ளதால் அதை நம்புகின்றனர்.!நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, கடந்த 25 ஆண்டுகளில் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், ரசிக்கும்படியாக இல்லை.!இதன் எதிர்வினைதான் இந்த இளைஞர்களின் விரும்பத்தகாத செயல்களுக்கு காரணம்.!யாராவது வந்து மேஜிக் நடத்த மாட்டார்களா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான் விஜய் அரசியலை ஆதரிப்பது.!

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!இந்த இளைஞர்கள் பொத்தி வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பேசுவதை அவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாதவர்கள். இவர்களை குற்றவாளிகள் போல் பார்ப்பதும், கேலியாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல.!

சில கிறுக்குத்தனமாக பேசும் வீடியோக்கள், கூட்டத்தில் ஓடுவது, Dress code போட்டுக் கொண்டு வாக்களிக்க சென்றது எல்லாம் தவெகவின் மார்க்கெட்டிங் டூல்.!அது சினிமாத்தன விளம்பரமே தவிர இந்த இளைஞர்களாக சுயமாக செய்த காரியங்கள் இல்லை.!மீண்டும் கூறுகிறேன், நீங்கள் விமர்சிக்க வேண்டியது Psycho ஜோஸஃப் விஜய் மற்றும் அவரது கட்சி மார்க்கெட்டிங் teamதானே ஒழிய… இந்த இளைஞர்களை இல்லை.!

-கந்தசாமி மாரியப்பன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.