அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தீயவர்களின் தீய சக்தி – திமுக !

திருச்சியில் அடகு நகையை விற்க

1967 லிருந்து 2021 வரை திமுக 21 ஆண்டுகளும், அதிமுக 35 ஆண்டுகளும் ஆட்சி செய்த நிலையில், திமுகவை மட்டுமே தீய சக்தி என்று சொல்கின்றனரே ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.!

நான் அவரது சந்தேகத்திற்கு கூறிய காரணங்கள்…

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

  1. நில உச்சவரம்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஒரு குடும்பம் (கணவன் மனைவி) 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் தீவிரமாக அமல்.!

உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்றதால், குத்தகை எடுத்து விவசாயம் செய்தவர்களுக்கு அந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது.!

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

நிலக்கிழார்கள் தங்களின் பாசமான அடிமைகள் பெயரில் எழுதி வைத்திருந்த நிலங்கள், அந்த அடிமைகளுக்கே சொந்தமானது.!

நிலச்சுவான்தர்களின் எதிரி, கலைஞர்.! தீயசக்தி No 1.

  1. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த இடங்களை அவர்களுக்கே பட்டா வழங்கி, ஓட்டு வீடு கட்ட திட்டம் கொடுத்தது.!

இது குடியானவர்களை அதாவது நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக் கொண்டவர்களை எரிச்சலூட்டியது.!

குடியானவர்களின் எதிரி, கலைஞர்.!தீய சக்தி No 2.

  1. குடிசைமாற்று வாரியம் அமைத்து நகர்ப்புறங்களில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தால் அனைவருக்கும் வீடு.

எங்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடா.!

பணக்காரர்களின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 3.

  1. பேருந்துகளை அரசுடமையாக்கி கிராமப்புறங்களுக்கும் பேருந்துகளை இயக்கினார்.

பேருந்து முதலாளிகளின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 4.

  1. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தி ஹிண்டு, தினமணி, துக்ளக், விகடன், தினமல பார்ப்பணர்களை எரிச்சலூட்டியது.

பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 5.

  1. FCIக்கு எதிராக TNCSC ஆரம்பித்து நியாயவிலைக் கடைகளை திறந்து குறைந்த விலையில் அரிசி வழங்கி, குடியானவர்களிடம் கையேந்தும் நிலைமையை மாற்றியது.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

குடியானவர்களின் எதிரி, கலைஞர்.!தீய சக்தி No 6.

  1. எமர்ஜென்சியை எதிர்த்த ஒரே மாநில கட்சி திமுக, கலைஞர்.

இது தேஷியவாதிகளை எரிச்சலூட்டியது.

தேஷியவாதிகளின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 7.

  1. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட உரிமை, தகப்பன் சொத்தில் பெண்களுக்கு உரிமை, 8ம் வகுப்பு வரை பிறகு 10ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களின் திருமண உதவியாக ரூ. 10,000 வழங்குவது என்ற சட்டங்களை நிறைவேற்றினார்.

ஆண்களின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 8.

  1. பெரியார் சமத்துவபுரம் அமைத்து பறையர், பள்ளர், அருந்ததியர்களோடு வேளாளர், முக்குலத்தோர், பார்ப்பணர், வன்னியர், கோணார், நாடார், உடையார் சமூக மக்களையும் ஒன்றாக வாழ வைத்தது.

ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 9.

  1. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணையிட்டார்.

ஆதிக்க சாதிகளின் எதிரி, கலைஞர்.தீய சக்தி No 10.

  1. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட உரிமையை அதிகரித்து, வேளாளர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை அதிகரித்தார்.இது செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது.

செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.தீயசக்தி No 11.

  1. இட உரிமை அடிப்படையில் இந்துக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் அறநிலையத் துறை அதிகாரிகளாக கோவில்களில் நியமித்தார், கலைஞர்.இது, பறையர்களையும், பொம்பளைகளையும் கேட்டுத்தான் நாங்கள் முடிவெடுக்க வேண்டுமா என்று அறங்காவலர்களாக இருந்த செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பண சமூக மக்களை எரிச்சலூட்டியது.

செட்டியார், முதலியார், பிள்ளை, பார்ப்பணர்களின் எதிரி, கலைஞர்.தீயசக்தி No 12.

இப்படி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்களும், பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

அந்த பலன்களை அடைந்த பயனாளிகளோ, தங்களுக்கு இந்த பயன்கள் கலைஞரால்தான் கிடைத்தது என்பதை உணராமல், ஊடகங்களின் பரப்புரைக்கு இரையாகி, அவர்களும் கலைஞரை கடிச்சு கொதற ஆரம்பித்ததால்…அவர்களுக்கும் கலைஞர் தீய சக்தியாக மாறி விட்டார்.! உண்மையில், கலைஞர்… தீயவர்களுக்கு மட்டுமே தீய சக்தி.!

-கந்தசாமி மாரியப்பன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.