‘ஒன்ஸ்மோர்’ டிரெய்லர் ரிலீஸ் நியூஸ்!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோ யுவராஜ் கணேசன் தயாரித்து வரும் 28-ஆம் ரிலீசாகும் படம் ‘ஒன்ஸ்மோர். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் டைரக்ஷனில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி, சோனா ஒலிக்கல், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இசை : ஹேஷம் அப்துல்வஹாப், எடிட்டிங் : நாஷ், ஆர்ட் டைரக்டர் : ராஜ்கமல், காஸ்ட்யூம் டிசைனர் : நவா ராஜ்குமார், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
‘ஒன்ஸ்மோர்-ன் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 22-ஆம் தேதி நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசியவர்கள்…
தயாரிப்பாளரும் இயக்குனருமான இரா.சரவணன், “கரகர காந்தக்குரலில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இதில் லவ்வர் பாயாக கலக்கியிருக்கார். தியேட்டரில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு இந்த ஒன்ஸ்மோர் இருக்கும்”.

ஹேஷம் அப்துல்வஹாப், “இந்தப் படம் தான் தமிழில் நான் ஒப்பந்தமான முதல் படம். ஆனால் ‘மாமன்’ படம் முதலில் வந்துவிட்டது. அனைவரும் எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய இயக்குனரின் கதையை அனுபவித்து மியூசிக் பண்ணியுள்ளேன். தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்”.
சோனா ஒலிக்கல், “அதிதி ஷங்கர் எனக்கு நெருங்கிய தோழியாகவும் அர்ஜுன் தாஸ் சிறந்த நண்பராகவும் இருந்து எனது நடிப்புக்கு ஆலோசனகள் வழங்கி உறுதுணையாக இருந்தனர்.
யுவராஜ் கணேசன், “படம் ரெடியாகி, பலமுறை ரிலீஸ் தேதி முடிவாகி, பல காரணங்களால் அது நடக்காமல், இப்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி ரிலீசாகிறது. டைரக்டரின் திறமைக்கு இந்தப் படம் நல்ல அடையாளம். ‘மாவீரன்’ ரிலீசான பிறகு தான் அதிதியைச் சந்தித்து கதை சொன்னோம். அதில் வாங்கிய சம்பளத்தைவிட கம்மியாகத் தான் இதில் வாங்கி நடிக்க சம்மதித்தார். இந்தக் கதையின் ஹீரோ ரகு கேரக்டருக்கு அர்ஜுன் தாஸைவிட்டால் வேறு ஆளே இல்லை”.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், ஹீரோ அர்ஜுன் தாஸ், ஹீரோயின் அதிதி ஷங்கர், தனது அம்மா-அப்பா, நண்பர்கள், உதவி இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோருக்கு நன்றி சொன்னார் டைரக்டர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.

அதிதி ஷங்கர், “எனது கடினமான காலத்தில் இப்படம் கிடைத்தது. எனது கேரக்டரான அஞ்சலியை உங்களில் ஒருத்தியாக ஏற்றுக் கொள்வீர்கள். சில வருடங்களுக்கு முன்பு அனிருத் கான்செர்ட்டில் அர்ஜுன் தாஸுடன் போட்டோ எடுத்தேன். இப்போது அவருடனேயே நடிக்கிறேன். எனது சிறந்த நண்பர்களில் அர்ஜுன் தாஸும் ஒருவர்”
அர்ஜுன் தாஸ், “இந்தக் கதையை வேறு சில கம்பெனிகளில் சொல்லி ஃபிக்ஸ் ஆகும் போது ஹீரோவை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ் ஸ்ரீகாந்தோ, ரகு கேரக்டரை அர்ஜுன் தாஸைத் தவிர வேறு யாரும் பண்ண முடியாது என்பதில் உறுதியாக இருந்து யுவராஜ் கணேசன் மூலம் இப்போது ரிலீஸ் வரை வந்துள்ளது. என்னை முழுமையாக நம்பிய விக்னேஷுக்கு நன்றி. ஷூட்டிங் ஆரம்பித்த புதிதில் வாங்க சார் என என்னை அழைத்த அதிதி ஷங்கர், அடுத்த நாளே, “வாடி மாப்ளே” என கூப்பிடும் அளவுக்கு நண்பர்களாகிவிட்டோம். மிகவும் அருமையான காதல் படம் இது”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.