அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சியில் ஒரே வீட்டில் 50-க்கும் அதிகமான நோய்வாய்ப்பட்ட நாய்களை அடைத்து வைத்து வளர்த்து வருவதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார், மருத்துவ சமூக நல சங்க செயலாளர் தர்மலிங்கம்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, “திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 62 வது வார்டு அன்பிலார் நகரில், ஒரே வீட்டில் 50-க்கும் மேற்பட்ட நோய்வாய்ப்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறார். இதன் மூலம் அங்குள்ள தெருக்களில் அந்த நாய்கள் சிறுநீர் – மலம் கழிக்கின்றன.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

இது சுகாதார சீர்கேட்டை உருவாக்குவது மட்டுமின்றி குழந்தைகளுக்கு தொற்று நோய்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை முறையிட்டும், மாமன்ற உறுப்பினர் சுபா ராஜகோபால் பல முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரையில் எந்த பலனுமில்லை.

ஒன்று, சுகாதார சீர்கேட்டை உருவாக்கிவரும் அந்த நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் அந்த நாய் வளர்ப்பவரிடம் பாதுகாப்பாக அடைத்து வைக்கச்சொல்லி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தலாவது வழங்க வேண்டும்” என்பதாக கோரிக்கையை முன்வைக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.