திரிஷா பற்றி பேச்சு: ஆர்பி உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்  உதயகுமார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகை திரிஷா குறித்து உதயகுமார் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.