தடுமாறி விழும் பொதுமக்கள் ! அமைச்சர் தொகுதியின் அவல நிலை !
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது கம்பரசம்பேட்டை, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சியாகும். கம்பரசம்பேட்டையில், ரயில்வே கேட்டை தாண்டி உள்ளே விசாலாட்சி அவென்யூ, வெள்ளாந்தெரு, கணபதிநகா், பாலாஜி அவெண்பூ, குமரன் நகர் மலர்கள் நகர், கணேஷ் நகர், பெருமாள் கோவில் தெரு, தமிழன் நகா், புதிய தமிழன் நகர் போன்ற தெருக்களில் 4000 க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் அதிகம் பேர் இருப்பதால் இவர்கள் நிலம், தொழில்வரி, வீட்டுவரி, குடிதண்ணீர்வரி போன்ற வரி இனங்கள் மூலம் பலலட்சம் வருமானம் அரசுக்கு வருகின்றது. இச்சூழலில் ரயில்வே கேட்டை விட்டு இறங்கியவுடனே கற்கள் பெயர்த்து தடுமாறி விழக்கூடிய சூழ்நிலை சாலைகள் உள்ளது.
இரவு நேரங்களில் எரியாத மின்விளக்கினால் இருட்டில் அனைவரும் எது சாலை எங்கே போவது என தடுமாறியவர்களும் உண்டு. இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்கள் பழுதாய் போகும் அவல நிலையில் உள்ளது. 2010ஆண்டு எடப்பாடி ஆட்சியில் போட்ட சாலைகள் என்பது ஹைலைட்டான செய்தியாகும். இது தொடா்பான கோரிக்கைகளை ஊராட்சி ஒன்றியத்தில் கொடுத்தும். எந்த நடவடிக்கை இல்லை.
கடைசியா முதல்வர் ஜோசப் விஜய் 10.07.2026 அன்று கரூா் சென்று திரும்பும் போது அமைச்சர் ஆனந்த் இடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதே மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியாகும். நாம் கேட்பதெல்லாம் மிஸ்டா் அமைச்சர் ரமேஷ் அவா்களிடம் கம்பரம்பேட்டை உங்கள் தொகுதிதான் என்பது தெரியுமா? என்பதே நம் கேள்வியாகும். மாவட்ட பொறுப்பு அமைச்சா் தாங்கள்தான் என்பதை மறக்கமாட்டீா்கள், விரைவில் நடவடிக்கை எடுப்பீா்கள் என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனா்.
— தஞ்சை க.நடராசன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.