எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்!
லால்குடி சிறுதையூர் பாரதி நகர் பகுதியில் 15 மேற்பட்ட ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்கு கிளம்புவது போல, 50-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்வது; இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை வேலிகளை தாண்டி புகுந்து கடித்து குதறுவதும் தொடர்கதையாக உள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று திரும்பி வருபவர்களை துரத்தி கடிப்பதும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது பாய்ந்து வந்து கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது 15 க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி தெருவில் இழுத்து வந்து போட்டுவிட்டு சென்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எத்தனை முறை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று எடுத்துக் கூறியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
யாரை எந்த நேரத்தில் தாக்குமோ என்று உயிரை கையில் பிடித்து கொண்டு அச்சத்துடன் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளிவிட்டது இந்த விவகாரம்.
ஒரே நேரத்தில் 15 ஆடுகளை இறந்தவர்களின் நட்டத்தை யார் ஈடு செய்வது? இந்த சம்பவத்துக்கு யாரை பொறுப்பாக்குவது?
— சதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.