திருப்பரங்குன்றம் தமிழர்களின் பெருமிதம்! மத நல்லிணக்க மாநாடு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வின் அடிப்படையில் சுதந்திர போரில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம், ஆனால் இங்கே பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தலும் சூழ்ச்சியை  பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள் என மதநல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு ….

மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பாக திருப்பரங்குன்றம் தமிழர்களின் பெருமிதம் மத நல்லிணக்க அடையாளம்! எனும் தலைப்பில் மத நல்லிணக்க மாநாடு ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றம்!

Frontline hospital Trichy

மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பாக திருப்பரங்குன்றம் தமிழர்களின் பெருமிதம்! மத நல்லிணக்க அடையாளம்! எனும் தலைப்பில் மத நல்லிணக்க மாநாடு மாநாட்டிற்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகிக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நாகை திருவள்ளுவன், பசும்பொன் பாண்டியன்,, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன், மீ.த. பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையை மத நல்லிணக்க மலையாக தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரி மதுரை மத நல்லிணக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில்  மத நல்லிணக்க மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதன்படி திருப்பரங்குன்றம் மலை தமிழர்களின் மத நல்லிணக்க அடையாளமாக இருப்பதால் தமிழ்நாட்டில் மத நல்லிணக்க மலையாக திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனவும்,

1923 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையில் மதுரை சார்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி முடிவுக்கு வந்த பிரச்சனையை மக்களிடையே மதப்பிளவை உருவாக்கும் வகையில் கலவரம் செய்த கட்சிகள் அமைப்புகள், நீதிமன்ற உத்தரவை மீறிய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மக்கள் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், ஆடு, கோழி நேர்த்திக்கடன் செய்யும் நடைமுறைக்கு எதிராக  மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரை வீரன், அறநிலையத்துறை அதிகாரி சூரியகுமார், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் சண்முகம், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை தலைவர் செந்தில்வேலன் ஆகியோர் அரசியல் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக செயல்படுவது சட்டவிரோதம். எனவே தமிழ்நாடு அரசு சங்பரிவார் சிந்தனை கொண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து சட்டம் மத நல்லிணக்க சிந்தனை உள்ள அதிகாரிகளை பொறுப்பில் நியமிக்க வேண்டும்.

மதுரை மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றத்தில் மதப்பிரச்சாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் அரசியல் சட்ட செயற்பாட்டாளர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். அரசு நிர்வாகத்தின் செயல்பட்டால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

இந்த அரசியல் சட்ட விரோத போக்கை மாநாடு கண்டிப்பதோடு, அனைத்து மக்களுக்கும் அரசு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது ஆகிய ஐந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாநகர் காவல்துறை அனுமதி இந்த மாநாட்டிற்கும், பேரணிக்கும் வழங்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் நடத்த கேட்கவில்லை, இதை நடத்தக் கூடாது என காவல்துறை, வருவாய்த்துறை தடுத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

மத நல்லிக்கணத்தை விரும்பு ஆட்சி, ஆட்சியாளர்கள் இருக்கும் வேளையில் அதிகாரிகள் அனுமதி வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு முதல்வர் மதவாத சக்தியை எதிர்த்து போராடி வருகிறார் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை.

மதுரை மாநகர் காவல்துறை, ஆட்சி நிர்வாகம், அனுமதி மறுத்திருப்பது, நாங்கள் இதனை கண்டிக்கிறோம். எங்களை போன்ற சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டியது காவல்துறைக்கு, மத வெறியர்களுக்கு ஒரு வழிமுறை அதற்கு எதிராக போராடுபவர்களை ஒரே வழிமுறை.

ஒவ்வொருக்கு அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையில் நாம் தலையிடவில்லை, அதனை பின்பற்றினால் மதநல்லிணக்கம் துளிர்க்கும் அதை புரிந்து கொள்ளத்தான் இந்த மாநாடு,

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நாம் இந்து சமூகத்தை விமர்ச்சிக்கிறோம், கூறுகிறார்கள், இந்து மத நம்பிக்கை வேறு, இந்து மத நம்பிக்கையை பயன்படுத்தி  அரசியல் செய்வது வேறு, மதக் குரு மார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும்.

மதத்தை கையில் எழுத்து மதத்திற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சனை எழுகிறது. இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டியது இந்து மதப்பற்றாளர்கள், குருக்கள், மத சார்ந்தவர்கள்தான்,சங்கராசாரியார்கள் பாஜகவை கண்டிக்காமல் இருக்கிறார்கள்.

இந்து மக்களிடம் இஸ்லாம், கிறிஸ்தவ அந்நிய மதம் என வேற்றுமை படுத்துகிறார்கள், சிறுபான்மை மதத்திம் மீது வெறுப்பை விதைக்கிறார்கள்இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள், அதில் புரதச் சத்து இருக்கிறது என மக்கள் அதிகளவில் மாட்டு இறைச்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கே அதை வைத்து அரசியல் செய்கிறார்கள் இந்த சங்பரிவார் கும்பல், நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வின் அடிப்படையில் சுதந்திர பேர வெள்ளையனை வெளியேற்ற போராடினார்கள், ஆனால் இங்கே பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தலும் சூழ்ச்சியை  பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள்.

இந்துக்கள் இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்றாவது தடுத்துண்டா? இந்துக்கள் கோவில் கருவறைக்குச் செல்ல சமூகத்தினர் அழைத்துச் செல்ல  முன் வந்ததுண்டா? இல்லை,

ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என எந்த தலித் தலைவர்கள் எதிர்த்தார்களா?

நீ ஆட்சியை கவிழ்ப்பாய் என தெரிந்தும் வி.பி.சிங்க அந்த இட ஒதுக்கீடை கொண்டு வந்தார் அவர்  நட்பு சக்தியா,? மோடி, அமித்ஷா நட்பு சக்தியா?

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏன்பொருளாதாரத்தைஅடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும், சமூக நீதியை பலவீனம் செய்யவே செய்தார்கள், இவர்கள் ஓ.பி.சி, எஸ்.இ, எஸ்.டி மாணவர்களுக்கு செய்வார்களா? .பி.சி மக்களை ஏய்கிறார்கள், எஸ்.சி, எஸ்.டி மக்களை ஏமாற்ற முடியாது, ஒரு சிலர் பதவிக்காக ஒடிக் கொள்வார்கள்,

ஓ.பி.சி மதத்தை சார்ந்த இந்து மக்கள் இதனை கண்கொள்ள வேண்டும்,

எந்த ஆட்சி வந்தாலும் அரசுக்கு ஆதரவாக, எதிராக செயல்படும் பிரிவுகளும் உண்டு. டாக்டர், சினிமா, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்  அதிகாரிகளை சந்தித்து மூளைச் சலவை செய்வார்கள்.

இது மதுரையில் நடந்த பிரச்சினையாகச் சொல்லவில்லை நாடு முழுவதும் நடக்கிறது,  சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்துக்களின் உணர்வுகளை மதிக்கிறோம், நம்பிக்கையை மதிப்பளிக்கிறோம் என கூறினார்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.