அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ரூம் பாய்’…!

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘ஏசிஎம் சினிமாஸ்’ சூர்யகலா சந்திரமூர்த்தி, டைரக்டர்: ஜெகன் ராயன் டி.எஃப்.டெக், ஆர்டிஸ்ட்: நிகில், ஹர்ஷா, கற்பகம், கவிதா விஜயன், அருண்ராஜா பிரபாகர், இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, ஒளிப்பதிவு: பாரதிராஜன், இசை: வேலன் சகாதேவன், எடிட்டிங்: டி.வி.மீனாட்சி சுந்தர், பி.ஆர்.ஓ.: புவன் செல்வராஜ்ஏலகிரி ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்களை கொத்தடிமை போல கொடுமைப்படுத்துகிறார் அந்த ஓட்டலின் மேனேஜர்.

இந்த நிலையில் அதே ஓட்டலில் ரூம் பாய் வேலைக்குச் சேர்கிறார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுதலை ஆகும் ஹீரோ நிகில். அந்த ஓட்டலில் ஸ்பை கேமரா வைத்து இளம் ஜோடிகளின் பெட்ரூம் சீன்களை வீடியோ எடுத்து மிரட்டும் மேனேஜரின் சில்லரைத்தனத்தை கண்டுபிடிக்கிறார் ஹீரோ.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த மேனேஜரை கொடூரமாக வெட்டி பொலி போடுகிறார் ஹீரோ. ரூம் பாய்க்கு ஏன் இந்த கொலைவெறி? இதற்கு விடை தான் தலை சுத்த வைக்கும் ஃப்ளாஷ் பேக். ஹீரோவின் அப்பாவுக்கு ஒரு கள்ளக் காதலி.  அம்மாவுக்கு ஒரு கள்ளக் காதலன்.

ஆனால் அதுல ஒண்ணு அபாண்டம். ஒண்ணு நிஜம். இரண்டு வரிகளைப் படிச்சாலே உங்களுக்கு தலைசுத்துற மாதிரி இருக்குமே? படத்தில் இமான் அண்ணாச்சியும் பிர்லா போஸும் தான் நமக்கு ஓரளவு தெரிந்த முகங்கள். ஹீரோ உட்பட மற்ற எல்லாருமே புதுமுகங்கள். எல்லாருமே தட்டுத்தடுமாறி திக்கித் திணறித்தான் நடித்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சியே எரிச்சலைக் கிளப்புறாருன்னா மத்தவர்களைப் பத்தி சொல்லவே வேணாம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹீரோவாவது கொஞ்சம் பரவாயில்ல. அந்த ஓட்டலின் மேனேஜர், ஓனர், ஹீரோயின் அப்பாவாக வரும் நடிகர்களின் இம்சைய தாங்க முடியல. இதவிடக் கொடுமை என்னன்னா…. ஒரு வாரமாக அப்பாவைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்றாரு ஹீரோயின். அந்த அப்பாவைத் தேடி லோலோன்னு அலையுது போலீஸ். மேனேஜரின் டெட் பாடிய வச்சுக்கிட்டு ஓட்டல் ஓனர் பிம்பிளிக்கி பிளாக்கி விளையாடுறான். ஸ்ஸ்ஸ்…ஸப்பா முடியலை ப்பா.

திரைப்படக் கல்லூரியில் படிச்சவராம் டைரக்டர். அதுக்கான எந்த கூறுபாடும் படத்துல இல்லையே ஜெகன் ராயன் சார். ஒரு சீன், ஒரு ஷாட், ஒரு ஃபிரேம் கூட மனசுல நிக்கலையேப்பு…. புதுமுகங்களிடம் நடிப்பை வாங்கத் தெரியாத அளவுக்கு நீங்கள் படிச்சிருக்கீகங்குறது மட்டும் நல்லா தெரியுது. இதற்கு மேல் இந்த பணத்தை விமர்சித்து புதுமுகங்கள் மனசை காயப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறோம்.

அங்குசம் பார்வையில் ‘ரூம் பாய்’ 30/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.