மனிதரில் புனிதர் எம்.ஜி.ஆர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஏப்ரல் 14 – பூஜை வைத்துக் கொள்ளலாம் என்றார் எம்.ஜி.ஆர். சுற்றிநின்ற அனைவருக்கும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். நான்தான் ஹீரோ. சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கள்தான் வசனம் எழுதுகிறீர்கள் வாலி என்றார்.
வாலியோ கருங்கல் சிலையானார்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரியான மோகன்தாசுக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம், ஒழுங்கு மக்கள்பிரச்சினை, திட்டங்கள், போட்டிகள், ரசிகர்கள், தொண்டர்கள், எத்தனைவிதமான நெருக்கடிகள், எத்தனைவிதமான பிரச்னைகள், எப்போது எம்.ஜி.ஆர். சறுக்குவார் என்று எதிர்கட்சி தலைவர் கருணாநிதி, இவை எல்லாவற்றையும் சமாளித்து அரசாள வேண்டும்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மூச்சுவிடக்கூட நேரமில்லை. இருந்தும் நான் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்கிறாரே என்ன மனிதர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்து விட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தையை தெரிந்தவர் எம்.ஜி.ஆர். என்பது உண்மையே? ஆனால், சினிமாவில் நடிப்பது சாத்தியமா? சாத்தியமே என்று புன்னகையுடன் எம்.ஜி.ஆர். கதை தயாரிக்கும் பணிகளில் பத்துநாட்கள். கதை தயார் என்று தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம் சொன்னார் வாலி. அன்றிரவே வாலி வீட்டிற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என்.குஞ்சப்பன்.

வந்தவர் நாளை காலை 6 மணிக்கு முதல்வர் எம்.ஜி.ஆருடன் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும்போது அவரிடம் கதையை சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்தில் சென்னை திரும்பி விடலாம். ஆகாயத்தில் பறந்தபோது கவிஞர் வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர். கவனம் மாறாமல் கேட்டார். சில திருத்தங்களை சொன்னார். படத்தின் தலைப்பை கவிஞர் வாலியையே சொல்ல சொன்னார். அவர் சொன்ன தலைப்பு “உன்னை விடமாட்டேன்”.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

1971 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட நேரமது. வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கிற பலத்த எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. வெற்றி செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர். காஷ்மீர் (இதயவீணை) படப்பிடிப்பில் இருந்தார். தொலைபேசியின் மூலம் தனது விருப்பத்தை நாசுக்காக கலைஞரிடம் சொல்லிவிட்டு, தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

ஆனால் திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது என்று எம்.ஜி.ஆரின் கோரிக்கை கலைஞரால் நிராகரிக்கப்பட்டது. அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதனை சகித்துக்கொள்ளுமா? பிரதமர் மொரார்ஜி தேசாய் கெடுபிடியான மனிதர் அவர் இதை அனுமதிக்க மாட்டார். தவிர அரசியலமைப்பு சட்டத்தில் சவால் விடக்கூடிய காரியமாகும். ஆகவே இது வேண்டாம். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனைகளை சொன்னார்கள். இவர்கள் எல்லோருக்குமே புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுற்றினார் எம்.ஜி.ஆர்.முதல்நாளே தனக்கு அறிவுரை சொன்னவரிடம் பேப்பர் பார்த்தீர்களா? அவரும் தட்டுத்தடுமாறி பேப்பரைப் பார்த்தார் தட்டுப்பட்டது அந்த செய்தி. அதாவது மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு தன்னுடைய கடமைகளுக்கு குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்று பிரதமர் மொரார்ஜி தேசாய் பேட்டி கொடுத்திருந்தார். செய்தியை படித்த அனைவரும் அசந்து போனார்கள். எம்.ஜி.ஆர். மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரை கேட்டிருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பத்திரிக்கைகள் இந்த விசயத்தைப் பற்றி எழுதி, விசயத்திற்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தது. பிரதமரை நேரில் சந்தித்த நிருபர்கள் இதுகுறித்து கேள்விகளை கேட்டது. அவர் அளித்த பதில்தான் மேலே சொன்னது. எப்படி நடந்தது இந்த அதிசயம் யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்த வேலைகள் தொடங்கின.

அப்போது புகழ் பெற தொடங்கியிருந்த இளையராஜா இசையமைக்க பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சரான நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா பிரமாதமாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் இளையராஜா. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படத்தில் நடிப்பதுதான் முக்கிய செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தை பத்திரிக்கைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து எழுதியது.

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு. கலைஞர் தனக்கு கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறை பொறுப்பை தான் முதல்வரானதும் தன் வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே சினிமாவில் நடிப்பது என்பது வெட்டாட்டம். இதுபோல் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர். நடந்துகொண்டிருந்த வேளையில், எம்.ஜி.ஆரிடமிருந்து திடீர் அறிவிப்பு. தான் திரைப்படத்தில் நடிப்பது நிறுத்தப்படுவதாக. வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் பிரச்னைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கின.

ஏன் நிறுத்தினீர்கள் எவருமே எம்.ஜி.ஆரிடம் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா.
முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத நபர் அவர். மற்றவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை சர்வசாதரணமாக செய்து முடிக்கக் கூடியவர் எம்.ஜி.ஆர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் யூகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக அறிவிப்பார். 10 நிமிடங்களில் அதை தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். மக்கள் நலம் பேணுவதாக இருக்கும் என்று மக்கள் நினைப்பார்கள்.

சத்துணவுத்திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கி கையை தூக்கிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கி கைகளை நீட்டினர். எம்.ஜி.ஆரின் மீது சந்தேகத்தின் நிழல் கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். என்ற மந்திர வார்த்தையின் பலம்.

எம்.ஜி.ஆருக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்கு தலைவன். ஏழைகளுக்கு ரட்சகன், எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம், படத்தயாரிப்பாளர்களுக்கு அள்ளித்தரும் காமதேனு. வறியவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளல். தமிழ்நாட்டின் தாய்மார்களுக்கு அவர்தான் கண்கண்ட கடவுள். இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர். என்ற மந்திர சொல்லுக்கு உண்டு. ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், பிரமிப்புகளும் நிறைந்த மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர்

.-ஹரிகிருஷ்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.