மாணவர்களே..! பெற்றோர்களே..! – நீங்கள் கல்லூரியில் சேர போகும் முன் கவனிக்க வேண்டியவை !

0

மாணவர்களே..! பெற்றோர்களே..! – நீங்கள் கல்லூரியில் சேர போகும் முன் கவனிக்க வேண்டியவை !

 

கடந்த வாரம் தமிழக கலைக் கல்லூரிகளில் அரசாணையின்படி மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்தும் தமிழக அரசு ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தி தீர்வு காணுமா என்பது குறித்தும் விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்த வாரம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் விவரங்களை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதையும் விரிவாக வெளியிடுகிறோம்.

 

https://businesstrichy.com/the-royal-mahal/

2018-19ஆம் ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் / சுயநிதி கல்லூரிகளில் இளநிலை/முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளைக் கல்லூரிக் கல்வி இயக்குநர் ந.க.எண்.991/எம்1/2018 நாள்: 02.05.2018-ம் மடல் வழி, அரசாணை 1(டி) எண்.133, உயர்கல்வி(ஜி) துறை நாள்:25/04/2018ஐ உடன் இணைத்து அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணைய இயக்குநர்களுக்கும், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அலுவலகம் வழியாக அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கும், சுயநிதி கல்லூரிகளுக்கும் இம் மடல் அனுப்பி வைக்கப்படும். கல்லூரிக் கல்வி இயக்குநரின் இம் மடல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடைபெறும் சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கும் பொருந்தும். இந்த அரசாணை சொல்லும் நெறிமுறைகள் இளநிலை (UG) பட்டப்படிப்பு அளவில் என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்…

 

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை வெளிப்படையாக அமையவேண்டும். கல்லூரி முதல்வர் தன்னையும் உட்படுத்தி மாணவர் சேர்க்கைக்கான மூத்த ஆசிரியர்களைக் கொண்ட 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவேண்டும். இதில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவு சார்ந்த ஆசிரியர் இருக்கவேண்டும்.

மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்கும் இடஒதுக்கீடு கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட பின்னர்தான் சுயநிதிப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

 

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட வேண்டும். எந்தெந்தப் பிரிவுகளில் சலுகை வேண்டப்படுகின்றேதோ அதற்கான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். இலங்கை அகதிகளின் மாணவர்களை வட்டாட்சியர் சான்று அல்லது கடவுச்சீட்டு. உள் நுழைவு அனுமதிச் சீட்டு(Passport.Visa) அடிப்படையில் சேர்த்துக்கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கையின்போது மாணவர்கள் ஆவணங்களைக் கொடுக்க 2 நாள் அவகாசம் கொடுக்கலாம்.

படிவங்கள் வழங்கல்….

 

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.48 என்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 என்றும் ரூ.50 என்று நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட/மலைவாழ் மாணவர்களுக்குச் சான்றிதழ் அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட வேண்டும். பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

+2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பங்கள் விற்கப்பட வேண்டும். + தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடனே விண்ணப்பம் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. நல்ல கால அவகாசத்தை மாணவர்களுக்கு முதல்வர்கள் வழங்கவேண்டும்.

 

விண்ணப்பங்கள்  பெறுவதற்கான கடைசி நாள்

+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 வேலை நாட்கள் கழித்துத்தான் கடைசி நாள் முடிவு செய்யவேண்டும்.

மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்றவுடன் 3 நாள்களுள் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை துறைவாரியான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும்.

அறிவிப்பு பலகையில் மாணவர் தரவரிசை வெளியிடப்பட்ட 2 நாள் அதாவது தேர்வு முடிவுகள் வெளிவந்த 15ஆவது நாள் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.

காலம் கடந்து வரும் SC/ST/MBC விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொண்டு, இடஒதுக்கீட்டில் குறைவான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் இந்த விண்ணப்பங்களையும் மாணவர் சேர்க்கையில் இணைத்துக் கொள்ளலாம்.

இளநிலை பட்டப்படிப்பில் சேர வயது உச்சவரம்பு 21. மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் SC/ST/BC/MBC/DNC மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் எனத் தளர்வு வழங்கப்பட வேண்டும். இந்த உச்சவரம்பையும் தளர்வுகளையும் கல்லூரிகள் கடைப்பிடிக்கவில்லை என்றால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை தேர்வு செய்தல்…

பொதுப்போட்டி மாணவர்கள் மெரிட் அடிப்படையில் அதிக மதிப்பெண் மாணவர்கள் வரிசைப்படுத்தவேண்டும். அதில் எல்லா இன மாணவர்களும் இடம்பெறவேண்டும். இடஒதுக்கீட்டு பெறும் மாணவர்களும் இந்தப் பொதுப்போட்டியில் இடம் பெறவேண்டும். பொதுப்போட்டி மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட பின்னர்தான் SC/ST/BC/MBC/DNC மாணவர்கள் அந்தந்த இனத்தின் அடிப்படையில் இனவாரி சுழற்சி முறையில் மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்பட வேண்டும். முதலில் இனவாரி சுழற்சியை மேற்கொள்ளக்கூடாது. தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனம் சார்ந்த மாணவர்களுக்கு 19% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதில் 100இல் 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

30% பிற்படுத்தப்பட்டவர் 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்/குற்றப்பரம்பரையினர் மொத்தம் 50% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதில் 100க்கு 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

31% பொதுப்போட்டியில் 100க்கு 5 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். முன்னாள் இராணுவ வீரர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்களுக்கு இரண்டு இடங்கள் வழங்கப்பட வேண்டும். விளையாட்டு மற்றும் என்சிசி மாணவர்களுக்கு 3% இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்…

 விற்பனை செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரம்

 விண்ணப்பம் பெறுவதற்கான கடைசிநாளில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம்

 கடைசி நாள் கழித்துப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்

 மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் – மாணவர் சேர்க்கைக் குழுவினரின் கையொப்பங்களுடன் இருக்கவேண்டும்.

 மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு தகவல்

 தகவல் பலகையில் ஒட்டப்பட்ட மாணவர் சேர்க்கைகான தரப்பட்டியல்கள்

 மாணவர் சேர்க்கைக் குழுவின் கூட்டக் குறிப்புகள்

 மாணவர் சேர்க்கைப் பதிவேடு

 மாணவர் சேர்க்கை குறித்துப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட தகவல் மடல்கள்

 கூடுதல் மாணவர் சேர்க்கைக்குக்

கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகங்கள்

அனுப்பிய மடல்களின் நகல்கள்

 SC/ST/BC/MBC/DNC/BC

துறைவாரியாக மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள். ஒவ்வொரு துறையிலும் இம் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள். விற்பனை செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரம்

 விண்ணப்பம் பெறுவதற்கான கடைசிநாளில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம்

 கடைசி நாள் கழித்துப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்

 மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் – மாணவர் சேர்க்கைக் குழுவினரின் கையொப்பங்களுடன் இருக்கவேண்டும்.

 மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு தகவல்

 தகவல் பலகையில் ஒட்டப்பட்ட மாணவர் சேர்க்கைகான தரப்பட்டியல்கள்

 மாணவர் சேர்க்கைக் குழுவின் கூட்டக் குறிப்புகள்

 மாணவர் சேர்க்கைப் பதிவேடு

 மாணவர் சேர்க்கை குறித்துப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்ட தகவல் மடல்கள்

 கூடுதல் மாணவர் சேர்க்கைக்குக்

கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகங்கள்

அனுப்பிய மடல்களின் நகல்கள்

 SC/ST/BC/MBC/DNC/BC

துறைவாரியாக மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள். ஒவ்வொரு துறையிலும் இம் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள்.

மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு விதிகள்…

 31% திறந்த வெளிப்போட்டி (OC)

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 26.5% பிற்படுத்தப்பட்டோர்+ 3.5% இஸ்லாமியர் (BC)

 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் குற்றப்பரம்பரையினர் (MBC+DNC)

 15% தாழ்த்தப்பட்டோர் (SC) + தாழ்த்தப்பட்டோர் + 3% அருந்ததியர் (SCA)

 1% மலைவாழ் இனத்தவர்.(ST)

 இடஒதுக்கீட்டில் பின்பற்றவேண்டிய விதிகள்

 100% அரசு கல்லூரிகளின் இடங்கள்

 50% அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் கல்லூரிகள் (எஞ்சிய 50% நிர்வாக ஒதுக்கீடு)

 90% அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகள் (எஞ்சிய 10% நிர்வாக ஒதுக்கீடு)

 50% தனியார் சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு (எஞ்சிய 50% அரசு ஒதுக்கீடு)

 50% அரசு உதவிபெறும் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு (எஞ்சிய 50% அரசு ஒதுக்கீடு)

 சிறுபான்மை கல்லூரிகள் 50% இடங்களைத் தங்கள் இனம் சார்ந்த மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். எஞ்சிய 50% இடங்கள் அரசு விதிகளின்படி OC/BC/MBC/SC/ST இடஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

 சிறுபான்மை கல்லூரிகளில் சிறுபான்மை மாணவர்களின் விண்ணப்பம் ஒதுக்கப்பட்ட இடங்களை விடக் குறைவாகப் பெறப்பட்டால் எஞ்சிய இடங்கள் அரசு ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

 இருபாலர் மற்றும் ஆண்கள் கல்லூரிகளில் பெண்களைச் சேர்த்தல்

 இருபாலர் கல்லூரி என்றால் ஒவ்வொரு துறையிலும் தரவரிசையின் அடிப்படையில் மாணவ, மாணவியர் மற்றும் திருநங்கைகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

 ஆண்கள் கல்லூரிகள் எனில், மாணவர் தரவரிசையில் 30% பெண்கள்+திருநங்கைள், எஞ்சிய 70% ஆண்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

 20% +2 தொழில்சார்ந்த படிப்பு (Vocational Course) படித்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

கல்லூரிகள் ஆவணப்படுத்த வேண்டிய விவரங்கள்…

 மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம்

 தரவரிசையில் சேர்க்கப்பட்ட மாணவர்கள்

 காலியாக உள்ள இடங்கள் விவரம்

 ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள்

சேர்க்கப்பட்ட விவரங்கள் ஒவ்வொரு

பாடத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த மாணவர்கள்

 தரவரிசையில் துறை வாரியாகச் சேர்க்கப்பட்ட மாணவர்கள்

 காலியாக உள்ள இடங்கள் விவரம்

 ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்கள் OC/BC/NBC/DNC/SC/ST/Differently Abled/Ex-servicemen/Sports Quota/NCC etc.

கட்டாயம் படித்திருக்க வேண்டிய பாடங்கள்…

கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்குக் கணிதம் கட்டாயம்

 வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல் பாடங்களுக்கு வேதியியல் கட்டாயம் படித்திருக்கவேண்டும்.

 வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல் பாடங்களுக்கு வேதியியல் கட்டாயம் படித்திருக்கவேண்டும்.

 Electronic BES படிப்புக்கு இயல்பியல், கணிதம் படித்திருக்கவேண்டும்.

 புவியமைப்பியல் படிப்பிற்கு இயல்பியல் வேதியியல் படித்திருக்க வேண்டும்.

 பூகோளம் படிப்பிற்கு உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்

 கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் படிப்பிற்குக் கணினி அறிவியல் படித்திருக்கவேண்டும். கணினி அறிவியல் படிக்காமல் கணிதம் மட்டும் படித்த மாணவர்கள் 3இல் 1 பங்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

 Home Science & Nutrition dietetics பாடத்திற்குத் தொழில்சார் இந்தப் பாடங்கள் மற்றும் உயிரியியல், வேதியியல் படித்திருக்கவேண்டும்.

 நுண்ணுயிரியியல் படிப்பிற்கு 80% தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்தவர்கள். 20% உயிரியல் படித்தவர்கள்

 இளங்கலை மற்றும் மொழிப் பாடங்கள் – 80% தொடர்புடைய பாடங்கள் 20% தொழில்சார் படித்தவர்கள்.

 வணிகவியல் மற்றும் நிறுவனச் செயலாண்மை பட்டப்படிப்பிற்கு வணிகவியல் படித்தவர்கள் 80%, . கணக்கியல் படித்தவர்கள் 20%

 BBM/BBA பட்டப்படிப்பிற்கு 80% வணிகவியல் படித்தவர்கள் 20% கணக்கியல் தொழில்சார் படிப்பு படித்தவர்கள்.

 விண்ணப்பம் செய்த மாணவர்களில் தகுதியுடையவர்கள் அனைவரையும் தர அடிப்படையில் வரிசைப்படுத்தவேண்டும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் முதலில் என்றும் அடுத்தடுத்து மதிப்பெண் எடுத்தவர்கள் இரண்டு, மூன்று என்ற நிலையில் வரிசைப்படுத்தவேண்டும்.

 தரவரிசையில் ஒரே மதிப்பெண் மாணவர்களை எடுத்த மாணவர்களில் முதல் முறையில் தேர்ச்சி பெற்றவர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

 இருவரும் முதல்முறையில் தேர்ச்சி பெற்றவர் எனில் அவர்களின் பதிவெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

 மொழிப்பாடங்களில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றப் பிறமொழி

பாடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பகுதி – 1 தமிழில் பெற்ற மதிப்பெண்,

பகுதி – 2 ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண், பகுதி 3 தெலுங்கு மற்றப்

பிறமொழி பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்த

வேண்டும்.

 மறுதேர்வு எழுதிக் காலம் தாழ்ந்து வரும் மாணவர்களுக்குக் காலியாக உள்ள இடங்களையும், இம் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

 முதல்வர்கள் அமைத்துள்ள மாணவர் சேர்க்கைக்கான குழுவினர் மாணவர் சேர்க்கைக்குப் பொறுப்பாளர்கள் ஆவர். முதல்வர்கள் மாணவர் சேர்க்கைக்கு முழு பொறுப்பாளர்கள் ஆவர்.

 அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ் ஆங்கிலத்தில் கற்பிக்கும் பாடங்களுக்கு ஒருமொழியைத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்த மாணவர்களின் சேர்க்கையின்போது வேறுமொழியை வேண்டினால் இடமிருப்பின் அம்மொழியை மாணவர்களுக்குக் கொடுக்கலாம்.

நம்ம திருச்சி

துணை ஆசிரியர்

ஆசைதம்பி 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.