அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கள்ளச்சந்தையில் 398 சிலிண்டர்கள் ! பதுக்கலில் ஈடுபட்டவா்கள் குண்டர் சட்டத்தில் கைது …

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் மதுரை கோவில் பாப்பாகுடிஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி  என்பவரின் வீட்டின் அருகே காலியிடத்தில் சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 209 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இதேபோன்று கோவில் பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் என்பரின் வீட்டருகே சோதனை செய்தபோது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 189 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கள்ளச்சந்தையில் சிலிண்டர் இரு இடங்களிலும் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு . இதனை தொடர்ந்து இருவர் மீதும் மானிய விலை சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல்  குண்டர் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும் மானிய விலை சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.