சாத்தான் குளம் வழக்கினை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மாண்புமிகு க.முத்து குமரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பில் வழக்கின் மதுரை அமர்வு உயர்நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு இருந்தார்.
தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தல் (Confirmation by High Court) என்பது அமர்வு நீதிமன்றம் (Sessions Court) ஒருவருக்கு மரண தண்டனை விதித்தாலும், அது நிறைவேற்றப் படுவதற்கு உயர் நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 368-ன் கீழ் உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் தற்போது BNSS sec 407 என்பது சட்டப்படியான நடவடிக்கை ஆகும்.
சாத்தான் குளம் வழக்கு உயர்நீதிமன்றத்தில் 21.04.2026 ல் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இன்று 24.04.2026 ல் மாண்பமை நீதியரசர்கள் என்.ஆனந்த் வெங்கடேஷ் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தூக்கு தண்டனை கைதிகள் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்பட்டனர். ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் வழக்கறிஞர் மூலம் வாதங்களை எடுத்து வைக்க வாய்தா கோரினார்கள். ஸ்ரீதர் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாட அனுமதி கோரினார். குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளார்களா ?என்பதை பற்றி நீதிபதிகள் கேட்டதற்கு குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். முதலில் மேல்முறையீடு செய்யுங்கள் என்று சொல்லி வழக்கினை 30.04.2025 க்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.
குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்ய ஜுன் 6 வரை கால அவகாசம் உள்ளது. அபராத தொகை ரூ 1.04 கோடி கட்டினால் மட்டுமே மேல் முறையீடு செய்ய முடியும். தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற உறுதிப்படுத்தல் வழக்கும் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கும் ஒரே நேரத்தில் இணைந்தே விசாரனை நடக்கும். சாட்சி விசாரனை மீண்டும் நடக்காது வாத பிரதிவாதங்கள் மட்டுமே நடக்கும். வழக்கு விசாரனை கோடை விடுமுறைக்கு பின்னர் வேகமெடுக்கும்.
**
சாத்தான்குளம் தூக்குதண்டனை கொலையாளிகள் விவரம் :
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்
SI பாலகிருஷ்ணன்
SI ரகு கணேஷ்
ஏட்டு முருகன்
காவலர் சாமதுரை
காவலர் முத்துராஜா
காவலர் செல்லதுரை
காவலர் தாமஸ் பிரான்சிஸ்
காவலர் வெயிலு முத்து
**
வழக்கறிஞர் Dr நல்வினை விஸ்வராஜு







Comments are closed, but trackbacks and pingbacks are open.