எஸ்டிபிஐ தலைவர் ஃபைஸி கைது ! தமிழ்நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் கண்டனம்…..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர்  ஃபைஸியை  மத்திய அரசின் அமலாக்க துறையினர் கைது செய்திருப்பதை தமிழ் நாடு வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக ரூ4 கோடி வசூல் செய்யப்பட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு. இந்த பணத்தை வைத்து இந்தியாவில் தீவிரவாத செயல்களை செயல்படுத்த பயன்படுத்துவதாக இவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாககைது செய்யப்பட்டு உள்ளார்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லா.
வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லா.

எஸ்டிபிஐ‌  அரசியல் கட்சி இதில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கிறார்கள் என்பதற்காக இஸ்லாமிய மகளிடையே அரசியல் எழுச்சி வந்து விடக்கூடாது அதை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த கைது நடவடிக்கையை நடத்தி இருக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

ஆர் எஸ் எஸ் அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு என்ன? அதன் கிளைகள் மற்றும் துணை இயக்கங்கள் உலகம் முழுவதும் எவ்வளவு இருக்கிறது பல லட்சம் கோடி ருபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து அந்த அமைப்புகளுக்கு வருவதும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி இருப்பதும் உலகத்திற்கே தெரிந்த விஷயம்.

சிறுபான்மை சமூகம் ஜனநாயகத்தில் பங்கு எடுத்து தேசிய நீரோட்டத்தில் கலந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து விடக்கூடாது என்கின்ற இஸ்லாமிய வெறுப்புணர்வின் காரணமாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த அமலாக்க துறை என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி எஸ்டிபிஐ கட்சியை முடக்க நினைக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் இருக்கும் ஜனநாயக அமைப்புக்கள் மத்திய அரசின்  ஜனநாயக விரோத செயலை கண்டித்து அறிக்கை விட வேண்டும்.  வக்ஃபு அன்ட் பர்ஷனல் லா கவுன்சில் எஸ்டி கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.