ஜாதிய வன்மத்தால் மறுக்கப்பட்ட அரசு நலத்திட்டங்கள் ! கோரிக்கை வைத்த பொதுமக்கள் !
கோட்டைப்பட்டி கிராமத்தில் அரசு திட்டங்கள், திருமண மண்டபம் கட்ட விடாமல், ஜாதிய வன்மத்துடனும் தீண்டாமை கடைப்பிடித்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி மாவட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் கோட்டைப்பட்டி கிராமத்தில் அரசு திட்டங்கள், திருமண மண்டபம் கட்ட விடாமல், ஜாதிய வன்மத்துடனும் தீண்டாமை கடைப்பிடித்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய மாற்று சமூகத்தை சேர்ந்தவர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஜாதிய வன்மத்தோடும் தீண்டாமையை கடைப்பிடித்து தொடர்ந்து தடுத்து வருவதாக பட்டியலின மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக கோட்டைப்பட்டி கிராமத்திற்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் தாட்கோ மூலம் திருமண மண்டபம் கட்ட அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி, கட்டிடம் கட்டப் போகும் நிலையில் கட்டிடம் கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருக்கின்றனர்.
இதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்த பெண்ணை எரித்து கொன்றுவிட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது, சாமி என்று கூப்பிட வேண்டும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று பட்டியலினை மக்களை மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
பட்டியலின மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் கிடைக்கவும், தடுத்து நிறுத்தப்பட்ட திருமண மண்டபம் (அறிவுமதி ) கட்டிடத்தை கட்டி முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
— ஜெய்ஸ்ரீராம்.