பேருந்து வசதி கோரி இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல் போராட்டம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மணப்பாறை அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் துவரங்குறிச்சி–மணப்பாறை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு SFI மாவட்டத் தலைவர் தோழர் வைரவளவன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் அமோஸ், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் தேவா, தோழர் ராகுல் உள்ளிட்ட SFI தோழர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சாலை மறியல் போராட்டம்!போராட்டத்தைத் தொடர்ந்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்துத் துறை மேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களுக்குள் பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அளிக்கப்பட்ட உறுதியை ஏற்று சாலை மறியல் போராட்டம் கலைக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.