தமிழ் சினிமாவை காப்பாற்றும் முதல்வர் விஜய் மகன்? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட வீடியோ 🫢
தமிழ் சினிமாவில் திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையிலான வர்த்தக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வீடியோவைக் காண👇🏻
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்த புதிய நடைமுறையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திரைப்படங்களை வெளியிடும்போது திரையரங்குகளிடம் பெறப்படும் அட்வான்ஸ் அல்லது டெபாசிட் முறையை தவிர்த்து, படம் வெளியான பின்னர் கிடைக்கும் வசூல் பங்கின் அடிப்படையில் 7 நாட்களுக்குள் ஷேர் தொகையை செட்டில் செய்யும் நடைமுறை பின்பற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், வசூல் கணக்கில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், BookMyShow உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளங்களின் TCR அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உரிய ஷேர் தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்காத பட்சத்தில், அது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் OTT வெளியீட்டுக்கு குறைந்தபட்சம் 8 வார இடைவெளி இருக்க வேண்டும் என்பதும் அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், OTT, Satellite, Audio, Overseas மற்றும் தமிழ்நாடு திரையரங்கு வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து வருவாய் பிரிவுகளிலும் கணக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கான வருவாய் பங்கீட்டு முறையிலும் தெளிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
‘சிக்மா’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டில் தொடங்கும் இந்த நடைமுறை, தமிழ் சினிமாவின் வர்த்தக நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக இருக்கும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
– அங்குசம் செய்திப் பிரிவு






Comments are closed, but trackbacks and pingbacks are open.