அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் கலைஞர் 8-வது ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

 

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலம், TVS டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை அடைந்தது. அங்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், கழக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் சல்மா, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், பி.எம். சபியுல்லா, கழக இலக்கிய அணி புரவலர் எம். செந்தில்,  மாநகராட்சி துணை மேயர் டி. திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.