சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் 19 ஆவது ஆண்டு விழா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அறிவு சார் குறையுடைய நபர்களுக்காக அவர்தம்  பெற்றோர்களால் நடத்தப்பட்டு வரும் சிறகுகள் அமைப்பு கடந்த 18 வருடங்களாக  நமது திருச்சி மத்தியப் பேருந்து நிலைய அருகில் உள்ள பார்வையற்றோருக்கான ஆர்பிட் வளாகத்தில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்பில் குறிப்பாக 18 வயதைக் கடந்தும் 45 வயது முதிர்ந்த  நிலையிலும் உள்ள மன வளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் அரசுத் தேர்வுகளில் எழுத பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த அமைப்பு  தனது 19 ஆவது ஆண்டு விழாவினை சிறகுகள் தொழிற்பயிற்சி மையத்தில் கொண்டாடியது. விழாவிற்கு வந்திருந்தோரை பாரதிதாசன் பல்கலைக் கழக ஐ.இ.சி.டி‌ துறைத் தலைவர் மற்றும் டீன் முனைவர்.இராம்கணேஷ் அவர்கள் விழாவிற்கு வந்திருந்தவரை வரவேற்றார்.

சிறகுகள் அமைப்பு 19 ஆவது ஆண்டு விழாமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன் அவர்கள் விழாவைத் தொடங்கி வைத்து  சிறப்புரையாற்றினார். அப்போது  மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் அடையாள அட்டையை வழங்குவதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் முதன்மையாக இருப்பதாகச் சொன்னார்கள்.

விழாவில் சிறகுகளின் 12 சிறப்பு நபர்களுக்கு நிரமையா மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், சிறப்பு பெற்றோர்கள் 15 நபர்களுக்கு ஆயூஸ் மான் இன்சூரன்ஸ் அட்டைகளையும் வழங்கினார்கள்.

இன்றையக் கூட்டத்தில் மக்கள் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பெற்றோர்கள் 13 நபர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்கள். மேற்படி மக்கள் கல்வி இயக்கத்தின் வழியாக அறிவுசார் குறையுடையோருக்கு தொழிற் பயிற்சிகள் தர இசைவு தெரிவித்தார்கள்.

ஆண்டு விழாவிற்கு திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து அதன் இணை இயக்குனர் செல்வி. அஜிதா அவர்கள் வந்திருந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இவ்வாண்டு பத்து பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற 16 சிறப்பு மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Special Children's Parents Associationசிறகுகள் அமைப்பு சிறப்பு மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உட்பட்ட அரசு தேர்வுகளுக்கு பயிற்சி தருவதைக் குறித்து வெகுவாகப் பாராட்டினார்கள்.

கூட்டத்தில் சிறகுகளின் தலைவர் பொன் சுந்தரம் அவர்கள் பேசும்போது 2008 இல் தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் தற்போது 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்கள்.

கடந்த ஏழு ஆண்டுகளில்  ஆறு சிறப்பு நபர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வு எழுதி இளநிலை அலுவலர்களாக பதவி வகித்து வருவதாக தெரிவித்தார்.

போதுமான இடவசதியும் வாகன வசதியும்  சிறப்பாளர்களுக்குக் கிடைத்தால் இவர்களின் அடிப்படைத் தேவைகளை செம்மைப்படுத்துவதுடன் கல்வியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற  சிறப்புப் பெற்றோர்களுக்கு‌ பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்புப் பெற்றோர்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் மனவளர்ச்சிக்குன்றிய பிள்ளைகளின் யோகா நடனமும் நடைபெற்றது. பெற்றோர்கள் வீட்டில் தயாரித்த பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அண்டை மாநிலங்களைப் போல அறிவு சார் குறையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர வாழ்வாதாரத் தொகையை ரூ 8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகளை முழுமையாக அரசே ஏற்க வேண்டும் என்றும் குறிப்பாக பெற்றோர்களுக்குப் பின் இவர்களது வாழ்வு கேள்விக்குறிஆகிவிடாமல் பாதுகாப்பு வழங்க பெற்றோர்களைக் கொண்டு நடத்தப்படும் இல்லங்களை அரசு கட்டித் தர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவாக சங்கத்தின் தலைவர் திரு. பூபதி அவர்கள் நன்றி கூறினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள்  சாய் கஸ்தூரி, பழனிமேகலை, கலைச்செழியன்,  சத்குருநாதன், ஜெயக்குமார் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.