பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு ஜுன் மாதம் சிறப்புத் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளித்து, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தஞ்சை மாவட்;ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர்இ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத் தேர்வில் இந்த ஆண்டு 5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வந்துள்ளது என்றார்.
வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர்இ இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறித்தி இருப்பதாக கூறினார்.
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் தேர்வு எழுதாதவர்களையும் சேர்த்து சிறப்புப் பயிற்சி அளித்து வரும் ஜுன் மாதத்தில் தேர்வ எழுத வைப்போம் என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம் என்றார் அமைச்சர்.
கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர்இ தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டோம் எனக் கூறுவது தவறு. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்தவர்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தை முறையின்றி செயல்படுத்தி வந்தனர் என்றார்.
தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அதிக மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் உயர்கல்வியை தடையின்றி படிப்பதற்கு வழி வகுத்துள்ளது என்றார் அமைச்சர்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், இருந்தாலும் மாணவர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.