அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

8 நாட்களுக்குப் பிறகு முதல் விமான சேவை ! ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியா–யுஏஇ இடையிலான பலவிமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் துபாய்–மதுரை மற்றும் அபுதாபி –மதுரை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஸ்பைஜெட்  விமான நிறுவனம் அறிவிப்பு...மேலும் விமான சேவைகள் மீண்டும் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து நிலைமைக்கு ஏற்ப விமான நிறுவனங்கள் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்குமுன் தங்களது விமான நிலை (Flight Status) குறித்து சரிபார்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

 ஸ்பைஜெட்  விமான நிறுவனம் அறிவிப்பு...இந்த நிலையில் மதுரை- துபாய் செல்ல ஸ்பைஜெட் விமானம் நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  8 நாட்களுக்குப் பிறகு துபாயில் இருந்து மதுரைக்கு விமான சேவை இயங்க உள்ளது. மேலும் துபாயிலிருந்து ஸ்பைஜெட் விமானம் மதுரை, புனே, ஜெய்ப்பூர், கொழிக்கோடு, அகமதாபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களுக்கு நாளை விமான சேவை நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.