சக மனிதனை சாகடிக்கிறோம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க இறங்கிய இருவர் நச்சு வாயு தாக்கி பலியாகி இருக்கிறார்கள். இது முதலமைச்சர் தொகுதி. தமிழ்நாடு, இந்தியா,  என அரசியல், பூகோளம் கடந்து பார்க்கப்பட வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு அவமானம். குறிப்பாக  பட்டியலின மக்களுக்கு எதிரான அநீதி!

காரணம், இந்த அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்படும் அநேகர், அவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. கையால் மலம் அள்ளுவதையும், கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கிச் சுத்தம் செய்வதையும் தடை செய்து, ‘துப்புரவுத் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம்’ 2013லேயே கொண்டுவரப்பட்டது. ஆனாலும், மனித உயிர்களைப் பலிவாங்கும் இக்கொடூரம் இன்றும் தொடர்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இன்னொரு கொடூரம்,  இதனால் பலியோனோருக்கு மறு வாழ்வு அளிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்பதும் சட்டம். அதையும் முறையாக மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மனிதக் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனையும் அபராதமும் என ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியது தமிழ்நாடு அரசு. நீதிமன்றங்களும் பலமுறை கண்டித்துள்ளன. ஆனால், இந்த பேரவலம் தொடர்கிறது.

அறிவியல் முன்னேற்றம் என பல விசயங்களில் பெருமை கொள்கிறோம்.  சக மனிதனை சாகடிக்கிறோம். வெட்கட்கேடு!

– டி.வி.சோமு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.