அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிக்கை! இனிமேல் விஜய்யின் கதி அதோகதி தான்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தன்னைப் பற்றி யார் விமர்சனம் பண்ணினாலும் எதையும் கண்டு கொள்ளாமல் “என் வழி தனி வழி” என கடந்து போகும் குணம் உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல் தன்னைப் பற்றிய புகழ்ச்சி  வார்த்தைகளுக்கும் மயங்காதவர். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு எதுக்கு ஆர்ப்பாட்டம்னே தெரியாமல் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியது தவெக. அதில் பேசிய அந்தக் கட்சியின் கள்ள லாட்டரி ஆதவ் அர்ஜுனா என்கிற பேர்வழி, ‘திமுகவின் மிரட்டலுக்குப் பயந்து அரசியலைவிட்டு ஓடிப்போனவர் ரஜினி’ என நட்டநடு மத்தியான வெய்யிலில் உளறிக் கொட்டினார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடெங்கும் கொந்தளித்து, ஆதவ் அர்ஜுனாவையும் தவெகவின் தலைவர் விஜய்யையும் நார்நாராகக் கிழித்து போஸ்டர் ஒட்டினார்கள். ”விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவனை[ரை] தோற்கடித்தே தீருவோம்” என சோஷியல் மீடியாக்களில் வீடியோ போட்டு விஜய்யை வெலவெலக்க வைத்தனர்.

ரஜினி ரசிகர்கள் ஆவேசம்....  அதே போல் தமிழ் சினிமாவின் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஏகப்பட்ட பேர் ஆதவ்வைக் கண்டித்து குரல் கொடுத்தனர். ரஜினியின் பக்கம் நின்றனர்.

முதல்வர் பிறந்தநாள்

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு விஜய்க்கு எதிராக களத்தில் குதித்துள்ளார். “ தவெகவின் ஆதவ் அர்ஜுனா என்பவர் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்தைக் கண்டித்து எனக்கு ஆதரவாக இருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற அவரின் அறிக்கையின் இறுதி வார்த்தைகள் தான் சூப்பர் அதிரடி ரகம்.

Rajinikanth: பொலிடிகல் அஜெண்டாவில் ரஜினி..! யாருக்கு சொந்தம்? திமுக Vs பாஜக  - தவெக மீது ஏவப்படுகிறாரா? | TN Election 2026 Rajinikanth On The Political  Agenda Who Owns Him DMK Vs BJP ...“காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” இதான் அந்த அதிரடி வார்த்தைகள்.

காலம் ஒரு கழுகு. காக்கைகளை நேரம் பார்த்துக் கொத்தித் தூக்கும் என்பதைத் தான் டைரக்டாக இந்த அறிக்கையில் சொல்லியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

”தன்னுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லையே என்ற விரக்தியில் இருக்கிறார் விஜய். மொத்தமுள்ளா 234 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்குக் கூட போட்டியிட ஆளே இல்லை. இந்த வேதனை பத்தாதுன்னு சிபிஐயை வச்சு கடுமையா மிரட்ட ஆரம்பிச்சிருக்கு பா.ஜ.க. மிரட்டல் டீலுக்கு ஒத்து வரலேன்னா அடுத்த சில நாட்களிலேயே விஜய்யின் மனைவி சங்கீதாவோ, மகன் ஜேசன் சஞ்சய்யோ மீடியாக்களில் விஜய்க்கு எதிராக ஓப்பனாக பேசுவார்கள்.

விஜய்
விஜய்

இப்படி இடிமேல் இடியாய் விஜய் தலையில் இறங்கிக்கிட்டிருக்கும் இந்த நேரத்தில் ஆதவ் அர்ஜுனா என்ற தற்குறியால் பலத்த இடி விஜய் தலையில் இறங்கியுள்ளது.   புகழ்ச்சிக்கு மயங்காத, விமர்சனத்தைக் கண்டு கொள்ளாத ரஜினிகாந்தையே விஜய்யும் அவரது தற்குறிக் கும்பலும் டென்ஷனாக்கிருக்குன்னா, இனிமேல் தவெகவின் அரசியல் எதிர்காலம் சூனியம் தான். விஜய்யின் கதி அதோகதி தான்” என்கிறார்கள் அரசியலில்  நல்லது கெட்டது அனைத்தையும் அறிந்த உண்மையான பத்திரிகையாளர்கள்.

ஏற்கனவே அஜித்தையும் அவரது மனைவி ஷாலினியைப் பற்றியும் அநாகரீகமாகவும் அறுவெறுப்பாகவும் சோஷியல் மீடியாக்களில் பதிவு போட்டு அஜித் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாரித்துள்ளது விஜய் தலைமையிலான தற்குறிக்கும்பல்.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களும் மூர்க்கமாக களத்தில் இறங்கிவிட்டதால் தவெகவின் தலைமைத் தற்குறியான விஜய் தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்டார் என்று தான் நமக்கும் தோணுது.

தம்பி…..இப்பத் தெரியுதா அரசியல்னா என்னன்னு?

—   ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.